Parihara mantra for all 12 places in the horoscope

அவரவர் ஜாதகத்தில் மொத்தம் 12 கட்டம். இதில் லக்னம் என்பதுதான் முதல் கட்டம். இப்படி மொத்தம் இருப்பது 12 கட்டம். இது அனைவருக்கும் இப்போ தெரியும். 9 கிரகங்களும் எங்கே எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.கவலை வேண்டாம். நான் இங்கே கொடுக்கிற மந்திரத்தை சொல்லி வந்தால் போதுமானது. அதாவது ஒரு கட்டத்துக்கு ஒரு மந்திரம் வீதம் தனித்தனியாக பதியப்படும். ஆகவே, நீங்கள் மொத்தம் பன்னிரண்டையுமே தினமும் காலை மாலை இரு வேலையும் சொல்லிக்கொண்டே வந்தால், அனைத்தும் நலமாகும் என நம்பப்படுகிறது. நம்பிக்கைதானே வாழ்க்கையாகும்.

லக்னம் . முதல் இடம்.

உயிர், ஜீவன், தோற்றம், அழகு.

இதற்கு நீங்கள் சொல்லவேண்டிய மந்திரம்.

ப்ராயோபவிஷ்டம் கங்காயாம் பரீதம் பரமர்ஷிபிஹி . க்ருஷ்ணே ஸ்வதாமோபகதே தர்மஜ்ஞானாதிபிஹி ஸஹ

Praayobhavishtam gangaayaam pareetham paramarshibihi.krushne swathaamobagadhe dharmajgnaanaathibihi saha.

ஆகவே, இந்த மந்திரத்தை காலை மாலை சொல்லிவந்தால் லக்ன தோஷம் குறையும்.

2ம் இடம்.

வாக்கு, தனம், குடும்பம், கண் பார்வை. நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

நமஸ்தஸ்மை பகவதே வாசுதேவாய வேதஸே,
பபுர் ஜ்ஞானமயம் சௌம்யா யன்முகாம்புருஹாஸவம்

namasthasmai bhagavadhe vaasudhevaaya vedhase,
papur gnaanamayam sowmyaa yanmukaampuruhaasavam

3ம் இடம்

சகோதரம், பேச்சு வல்லமை, கீர்த்தி, தைரியம், இளைய சகோதரம், சகோதரி, காது , ஆள் அடிமை, போகம். நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

ப்ரியவ்ருதோ உத்தானபாதெள திஸ்ர கன்யாஸ்ச பாரத , ஆகூதிர் தேவஹூதிஸ்ச ப்ரஸுதிரிதி ஸத்தம

priyavrutho uththaanapaadhaw thisra kanyaascha bhaaratha, aakoothir dhevahoothischa prasoothirithi saththama

4ம் இடம்

சுகஸ்தானம், தாய், வீடு வாகனம் நிலம். நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

ஜனன்யாபிஹிதஹ பந்தாக ஸ வை நிஸ்ரேயஸஸ்யதே,
பகவான் வாசுதேவஸ்தம் பஜ தத்ப்ரவணாத்மநா

jananyaabihithaha bhandhaaga sa vai nisreyasasyathe,
bhagvaan vaasudhevastham baja thathpravanaathmanaa

5ம் இடம்

சந்ததி, புகழ். நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

அஹம் புரா பரதோ நாம ராஜா விமுக்த த்ருஷ்டஸ்ருதசங்கபந்தக ,
ஆராதனம் பகவத ஈஹமாநோ ம்ருகோபவம் ம்ருக ஸங்காத்த தார்தக

aham puraa bharatho naama raajaa vimuktha thrushta sruthasangabanthaga,
aaraadhanam bhagavadha eehamaano mrukobhavam mruka sangaaththa thaarthaga.

6ம் இடம்

வியாதி, எதிரி, வழக்கு, கடன். நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

தைஸ்தான்யகாநி பூயந்தே தபோதாந ஜபாதிபிஹி ,
நாதர்மஜம் தத்த்ருதயம் ததபீசாங்க்ரி சேவயா

thaisthaanyakaani booyanthe thapodhaana jabaathibihi,
naadharmajam thathruthayam thathabeesaangri sevayaa

7ம் இடம்

களத்திரம், மாரகம், கூட்டாளிகள். நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ ஸ்மரணம் பாதசேவனம் ,
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்யம் ஆத்ம நிவேதனம்

sravanam keerthanam vishno smaranam paadhasevanam
archanam vandhanam dhaasyam sakyam aathmanivedhanam

8ம் இடம்

ஆயுள் ஸ்தானம். நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

நமோ நமஸ்தேகில காரணாய நிஷ்காரணாய அத்புத காரணாய
ஸர்வாகமாம்நாய மஹார்ணவாயா நமோபவர்காய பராயணாய

namo namasthekila kaaranaaya nishkaaranaaya athbutha kaaranaaya,
sarvaagamaamnaaya maharnavaayaa namobhavargaaya paraayanaaya

9ம் இடம்

பாக்கியம், தர்மம், பிரயாணம், கடவுள் பக்தி, குரு உபதேசம். நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

ததோ மனு ஸ்ராத்த தேவக ஸம்ஜ்ஞாயாமாஸ பாரத ,
ஸ்ரத்தாயாம் ஜனயாமாஸ தச புத்ரான் ஸ ஆத்மவான்

thatho manu sraaththa dhevaga samgnaayaamaasa bhaaratha,
sradhdhaayaam janayaamaasa dhasa puthraan sa aathmavaan

10ம் இடம்

தொழில், கர்மம், ஞானம், ராஜ்ய ஆதிபத்யம், ஜீவன ஸ்தானம். நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

தஸ்யாவநிஜ்ய சரணௌ ததபக ஸ்வமூர்த்நா பிப்ரஜ்ஜகத்குருதரோபி ஸதாம் பதிர்ஹி
ப்ரஹ்மண்ய தேவ இதி யத் குணநாம யுக்தம் தஸ்யைவ யச்சரண சௌசமசேஷ தீர்த்தம்

thasyaavanijya saranow thathapaga swamoorthnaa bibraj jagadhguru tharopi sathaam pathirhi
brahmanya dheva ithi yath gunanaama yuktham thasyaiva yascharana sowsa masesha theertham

11ம் இடம்

மூத்த சகோதர ஸ்தானம், லாபம். நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

ஜ்ஞானம் விவேகோ நிகமஸ்தபஸ்ச ப்ரத்யக்ஷ மைதிஹ்யம் அதாநுமானம்
ஆத்யந்தயோரஸ்ய யதேவ கேவலம் காலச்ச ஹேதுச்ச ததேவ மத்யே

gnaanam viveko nigamasthapascha prathyaksha maidhihyam athaanumanam
aadhyantha yorasya yatheva kevalam kaalascha hedhuscha thatheva madhye

12ம் இடம்

செலவு, தூக்கம், மோக்ஷம். நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

நாம சங்கீர்த்தனம் யஸ்ய ஸர்வ பாப ப்ரணாசனம்
ப்ரநாமோ துக்க சமனஸ்தம் நமாமி ஹரிம் பரம்

naama sangeerthanam yasya serva paapa pranaasanam
pranaamo dhukka samanastham namaami harim param


 

ஸ்நானம்

மோதிர விரலால் “ஓம்” என்று எழுதுங்கள். குளிக்கும் போது நிகழும் “அதிசயத்தை” பாருங்கள்.!

குளிக்கும் போது ஒரு சில விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்பது ஐதீகம்.

  1. குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்க வேண்டும்.
  2. கர்மம் செய்த பின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம்.
  3. மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் நோவு வரும்.
  4. தினமும் கங்கா ஸ்நானம் செய்ய முடியும். குளிக்கும் முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிர விரலால் ஓம் என்று தியானம் செய்து எழுதுங்கள். அந்த நீர் அப்போது முதல் கங்கை நீராக மாறிவிடும்.
  5. ஒரு நிமிட தியானத்தில் “இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்று கொள்ளுங்கள்” என்று இறையிடம் வேண்டி கொண்டு குளித்தால், உள்பூசையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகமும் ஆகிவிடும்.
  6. அக்னி எப்போதும் மேல்நோக்கியே பயணிக்கும். உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல் ஏறுவதுதான் சரி. தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து கடைசியில் தலையில் ஊற்றி கொள்ள வேண்டும். நமது மண்டை ஓடுக்கு எப்படிப்பட்ட அக்னியின் வேகத்தையும் தாங்குகிற சக்தி உண்டு. காலில் இருந்து பரவும் குளிர்ச்சி மேல் நோக்கி பயணிக்கும் போது உள் அக்னியானது தலையை நோக்கி பயணிக்கும். அதுவே சரியான முறை.
  7. தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை “பிரஷ்டம்” என்பர். அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது. அங்கு தான் அக்னியின் வீச்சம் கூடுதல் வேகமாக பரவும். ஆதலால், குளித்து முடித்தவுடன், முதலில் முதுகு பாகத்தைதான் துவட்ட வேண்டும்.
  8. குளிக்கும் நீரிலே டவலை நனைத்து பிழிந்து துவட்டுவது தான் உத்தமம். அனேகமாக, அனைவரும் ஈரம் படாத துண்டைத்தான் உபயோகிப்பீர்கள். உலர்ந்த துணியானது உள் சூட்டை வேகமாக பரவ செய்து பல வித உள் நோவுகளை உருவாக்கும்.
  9. பிறருடன் வாய் திறந்து பேச கூடாத மூன்று நேரங்களில் ஒன்று குளிக்கும் நேரம். மௌனத்தை கடைபிடிக்கலாம், அல்லது மனதளவில் தெரிந்த ஜெபத்தை செய்யலாம்.
  10. குளிப்பதினால், பஞ்ச இந்த்ரியகளால் செய்த தவறுகளினால் நமக்குள் சேர்த்து வைத்துள்ள கர்மாக்கள் களைய பெறுகிறது.
  11. குளிக்கும் போது, வாயில் கொள்ளளவு நீரை வைத்து குளித்தபின் துப்புவதால், கண்டத்துக்குமேல் (கழுத்துக்கு) வருகிற நீர் சம்பந்தமான கட்டுகளை, நோய்களை தவிர்க்கலாம்.
  12. வாயில் இருக்கும் நீர் மேல் நோக்கி எழும்பும் அக்னியின் வேகத்தை எடுத்துவிடும்.
  13. நீர் நிலைகள், குளம், ஆறு, கடல் இவைகளில் எல்லா தேவதைகளும், பெரியவர்களும் அரூபமாக ஸ்நானம் செய்வதாக கூறுகிறார்கள்.
  14. நாரம் என்கிற தண்ணீரில் நாராயணன் வாசம் செய்வதாகவும் சொல்வார்கள். ஆதலால், ஓடி சென்று அதில் குதிக்காமல், கரையில் நின்று, சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்தபின், நீர் கலங்காமல், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில் மெதுவாக இறங்கி சென்று குளிக்க வேண்டும்.
  15. நீரில் காரி உமிழ்வதோ, துப்புவதோ கூடாது.
  16. நீரின்றி ஒரு உயிரும் இல்லை.நீரை விரயம் செய்ய கடன் அதிகரிக்கும்.
  17. உப்பு நீர் ஸ்நானம் திருஷ்டி தோஷங்களை அறுக்கும்.

மேற்குறிப்பிட்ட அனைத்தும் குளிக்கும் போது நாம் பயன்படுத்த கூடிய நல்ல முறைகள்

 

புண்ணிய தீர்த்த நீராடல்

ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் தீர்த்தமாடுவதின் பலன் !!!

பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.
தீர்த்தமும் பலனும்:

  1. மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம்
  2. சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி)
  3. காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி)
  4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி
  5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு
  6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல்
  7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்.
  8. நள தீர்த்தம்,
  9. நீல தீர்த்தம்,
  10. கவய தீர்த்தம்,
  11. கவாட்ச தீர்த்தம்,
  12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.
  13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,
  14. கங்கா தீர்த்தம்,
  15. யமுனை தீர்த்தம்,
  16. கயா தீர்த்தம்,
  17. சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்
  18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல்
  19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி
  20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல்
  21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல்
  22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)
 

வெற்றிக்கு ஒரு வராஹி மந்திரம்

ஓம் ஐம் க்லெளம் ஓம் நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி வாராஹமுஹி வாராஹமுஹி
அந்தே அந்தினிநம;
ருந்தே ருந்தினி நம;
பஞ்ஜே பஞ்ஜினி நம;
ஜம்பே ஜம்பினி நம;
ஸ்தம்பே ஸ்தம்பினி நம;
மோஹே மோஹினி நம;


ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸர்வேஷாம் ஸா்வ வாக்
சித்த சக்ஷுா் முஹகதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு சீக்ரம் வஸ்யம் குரு குரு ஐம் க்லெளம் ட்ட, ட்ட, ட்ட, டட் ஹும்பட் ஸ்வாஹா


ஶ்ரீம் பஞ்சமி ஸா்வ சித்தி மாதா மம க்ரஹமே தன ஸம்ருத்திம் தேஹி தேஹி நம;
ஓம் வாராஹ முஹ்யை வித்மஹே
தண்ட நாதாய தீமஹி
தந்நோ ஹரிகிரி ப்ரசோதயாத்;
ஓம் மகிஷ த்வஜாய வித்மஹே
தண்ட ஹஸ்தாய தீமஹி
தந்நோ வாராஹி ப்ரசோதயாத்

 

அம்ருத சஞ்ஜீவினி மந்திரம்