அக்னி ஹோத்திரம்

ஒரு பிராமணர் தனது ஏழு வயதில் பூணல் போட்டுக்கொண்டு ,வேத பாடசாலையில் சேர்ந்து வேதம்,ஜோதிடம்,இவைகளை முறையாக படித்து ,பிறகு அந்த குருவின் வழிகாட்டுதலின்படி , நல்ல(பிராமண) குடும்பத்தில் பிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளுதல்வேண்டும்.

திருமணம் ஐந்துநாட்கள் முறையாக நடக்கவேண்டும்.தாலிகட்டும்போது ஹோமகுண்டத்தில் எரிந்துகொண்டு இருக்கும் அக்னியை அணையாமல் ஒரு பானையில் வைக்கவேண்டும்.

திருமண நாள் முதல் , இந்த தம்பதிகள் தம்பதியாக இருக்கும்வரை , அந்த அக்னியை அணையாமல், தினமும் காலை மாலை இருவேளைகளிலும், பதினைத்து நிமிடம் ஹோமம் செய்தல்வேண்டும்.

ஐம்பது வருடம் ஆனாலும் அக்னி ஒரு நாளில் ஒருதடவை கூட அனையக்கூடாது. அப்படி அணைந்தால் அதற்கு பிராயச்சித்தம் செய்து மறுபடியும் எரியூட்டவேண்டும்.

மனைவி எந்த காரணத்தை முன்னிட்டும், ஒரு நாள் கூட கணவனைவிட்டு பிரிந்து,சொந்தகாரர் வீட்டுக்கோ,விஷேஷங்களுக்கோ போகக்கூடாது .சென்றால் கணவருடன்தான் செல்லவேண்டும்.

தினமும் ஹோமம் செய்கிற கணவன் , அந்த மனைவி இருவரும்,அவர்களே சமைத்து சாப்பிடவேண்டும்.வேறு யார் சமைத்தாலும் சரி,அதையோ, உணவு விடுதிகளிலோ ,சாப்பிடக்கூடாது.

கணவன் பஞ்சகச்சமும், மனைவி மடிசார் புடவையும் அணியவேண்டும்(தூங்கும்போதும்கூட)

மனைவியானவள், தலை வாரி பின்னி இருக்கவேண்டும். தலைவிரி கோலமாக இருக்ககூடாது.

மூன்று நேரமும் சந்தியாவந்தனம், பிரும்ம யக்கியம் போன்ற அனுஷ்டானங்களையும், ஒளபாசனமும் காலை மாலை செய்யவேண்டும்.

இதுதவிர,உத்திராயன புண்னியகாலத்தில்,அதிராத்ர சோம யாகம், வாஜபேய யாகம் ,சௌதாமினி யாகம் ,ஐந்திர யாகம் , போன்றவைகளை செய்யவேண்டும்.

இவர்கள் எக்காரணத்தை முன்னிட்டும்,இவர்கள் இருக்கின்ற ஊர் எல்லையை தாண்டவேகூடாது. நதிகளை கடக்ககூடாது. வெளிநாடு போகக்கூடாது .மனைவி பிற்காலத்தில் இறந்துவிட்டால், அந்த கணவன் பிறகு எந்த ஹோமமும் செய்ய இயலாது

இதுபோல் உள்ள தம்பதியர்கள் இந்தியாவில் சுமார் ஆயிரம்பேர் இருக்கிறார்கள்.நானும் இதுபோல் உள்ளவர்களை தரிசித்து ,நமஸ்காரம் செய்து ,ஆசி வாங்கியுள்ளேன்.

Leave a comment