அக்ஷய திரிதியை பற்றிய செய்தி

அக்ஷய திரிதியை பற்றிய செய்தி :=

இந்த நாளில் தங்கம் வாங்கினால் வளரும் என்று சொல்லி 5 வருடங்களாக கேள்விப்பட்டிருப்பீர்கள்.பார்த்திருப்பீர்கள்.வாங்கியும் இருப்பீர்கள்.

அப்படி எந்த சாஸ்திரத்திலும் சொல்லப்படவே இல்லை என்பதுதான் உண்மை.

தீபாவளி, பொங்கல், போன்ற பண்டிகைகள், காலம் காலமாக கொண்டாடி வருகிறோம்.ஏன் அதுபோல் இதை விட்டார்கள். அன்று இது தெரியவில்லையா. திடீர் என்று ஒரு பண்டிகை எப்படி உருவாகமுடியும். சரி என்ன சொல்லி இருக்கிறது சாஸ்திரத்தில் என்று தெரிந்துகொள்வோம்.

பணம் இல்லாதவர்கள், மன வேதனை படுகிறார்கள்.அதனால்தான் இந்த பதிவு.

மகாபாரதத்திலே , வனவாசத்தின்போது,திரௌபதி , கிருஷ்ணனிடம் பேசுகிறார்கள், அதாவது, சில சமயம் காட்டிலே, சிரமப்படுவதாகவும் ,அதற்க்கு என்ன செய்யலாம் என்கிறபோது, பகவான் கிருஷ்ணன், ப்ரத்யக்ஷ தெய்வமான சூரியனிடத்தில், பிரார்த்தித்து,கேட்டுக்கொண்டார். அந்த சமயம் சூரியன் கிருஷ்ணனிடம் ஒரு பாத்திரம் கொடுத்து, இதில் சமையல் செய்து பாதுகாத்துக்கொள்ளவும்.என்று சொன்னார். பிறகு ஒரு நிபந்தனையும் சொன்னார்.

அதாவது,சூரியன் சொன்னது, நான் உச்சிபோழுது தாண்டியவுடன், அஸ்தமனம் நோக்கி புறப்படுவதால், இரவு மறுபடியும் சமைக்கலாகாது, என்பதால், உச்சிபொழுதில் அனைத்தையும் முடித்துகொள்ளவேண்டும். பிறகு அது பலன் அளிக்காது என்றார்.

துர்வாச மகரிஷி ஒருதடவை, துரியோதனின் தூண்டுதலில் பெயரில் பாண்டவர்களை சோதனை செய்வதற்கு, வேண்டுமென்றே, உச்சிப்பொழுது தாண்டியவுடன் சாப்பாடிற்கு வந்தார். திரௌபதி என்ன செய்வது என்று முழி பிதுங்கியபோது ,கண்ணனை வேண்டிக்கொண்டு பிரார்த்தனை செய்தாள். கண்ணன் அங்கு வந்து, முதலில் எனக்கு பசிக்கிரபடியால் ஏதாவது கொடு என்று கேட்க, அதைத்தானே, நானே உன்னிடம் கேட்கிறேன் என்று திரௌபதி கூற,பிறகு அந்த பாத்திரத்தை எடுத்துவரச் சொன்னான் கண்ணன்.

அதிசயமாக, அதில் ஒரே ஒரு கீரை மற்றும் ஒரு பருக்கை சாதம் ஒட்டிக்கொண்டிருந்ததை கண்டான் கண்ணன். சரியாக அலம்பாமல் இருந்தபடியால் அது இருந்தது. கண்ணன் அதை சாப்பிட்டஉடன், துர்வாசருக்கு பசி அடங்கிவிட்டது.

ஆகவே, அக்ஷய பாத்திரம் என்று பெயர் வைத்தான் கிருஷ்ணன். அதாவது அன்றைக்கு திரிதியை என்பதால், அக்ஷய திரிதியை என்று வந்துவிட்டது.

ஆகவே, இந்த தினத்தில், எங்கு தங்கம் வாங்கினார்கள். அதாவது, சாதம், கீரைக்கூட்டு, இரண்டையும் அன்று சமைத்து, நீங்களும் சாப்பிட்டு, ஒரு அந்தணனுக்கு அதை,சாப்பிட கொடுத்தால், உங்கள் குடும்பம் எந்த கஷ்டமும் படாது.

விவசாயமும் பெருகும். தங்கம் பெருகி, சோறு கிடைக்கவில்லை என்றால், தங்கத்தை திங்க முடியாது என்பதை நன்கு உணரவும்.