அக்ஷய திருதியை

21.04.2015 செவ்வாய்க்கிழமை அக்ஷய திருதியை .

இதை பத்தி நான் முன்பே சொல்லிவிட்டேன். இருந்தாலும் ஞாபகப்படுத்துகிறேன்

இன்று நீங்கள், எப்போதும் போல , காலையில் குளித்துவிட்டு, உங்கள் வீட்டில் பூஜை செய்து கடவுளை வணங்குங்கள். பிறகு கோயிலுக்கு சென்று வரலாம்.

இன்று மிக முக்கியமே என்னவென்றால், சுண்டைக்காய் வெத்த குழம்பு வைத்து , அரைக்கீரை ,முளைக்கீரை , மசியல் செய்து, தயிர் சாதம் செய்து, கடவுளுக்கு நெய்வேதியம் செய்து , நீங்கள் சாப்பிடவேண்டும். அந்த உணவை , யாராவது ஒருவருக்கோ அல்லது சிலபெருக்கோ , உங்கள் வீட்டில் உணவு கொடுக்கவும். விருந்தோம்பல் என்று நாம் இதை சொல்லுவோம்.

இதுதான் சாஸ்திரத்தில் சொல்லி இருக்கிறது.

இன்று தங்கம் வாங்க சொல்லவே இல்லை. அப்படி இருந்தால், தீபாவளி, பொங்கல், வருடபிறப்பு என்று நாம் ஆயிரக்கணக்கான வருஷாமாக கொண்டாடுகிறோம் அல்லவா. அப்போது அதுபோல் ஏன் இந்த பண்டிகையை கொண்டாடவில்லை.

திடீர் என்று ஒரு பண்டிகை எப்படி வரும். இதெல்லாம் இவர்களாகவே பரப்பி வருவது.

இன்று இப்படி சமைத்து சாப்பிடுவதால், உணவிற்கு பஞ்சம் வராது. வியாதி வராது. சும்மா தங்கம் வாங்கி வாங்கி, வைத்தால், பசி தீருமா.வியாதி போகவில்லை என்றால் தங்கத்தை வைத்து அழகு பார்க்க முடியா.

பணமே இல்லாதவன் எப்படி தங்கம் வாங்குவான். இறைவன் அப்படி ஒருபோதும் எதையும் சொல்வதில்லை. அதாவது, இறைவன் சொல்லும் சட்டதிட்டங்கள் எல்லாம் ஏழைகளை அனுசரித்துத்தான் இருக்குமே தவிர பணம் படைத்தவர்களின் நலன் கருதி சட்டம் இயற்றுவதில்லை.

இன்று பொருள் வாங்கினால் பெருகும் என்றால், ஒரு வீடு வாங்குங்களேன் பார்க்கலாம் .வாங்கினால் அடிக்கடி நீங்கள் வாங்குவீர்கள் இல்லையா அன்பர்களே.

இதெல்லாம் நடக்காத காரியம். ஆகவே, அன்பு பாசம்,இறை பக்தி இவைகள் அதிகம் வளரவேண்டும்.

இதனுடைய புராண கதை .

மகா பாரதத்திலே பஞ்ச பாண்டவர்கள் காட்டில் வசித்துவந்தபோது ,தினமும் அவர்கள் அன்னதானம் செய்ய, கடவுளாகிய கிருஷ்ணன் செய்த வழி யாதெனில்,காலை முதல் மதியம் பன்னிரண்டு மணிவரை யார் வந்தாலும், அவர்களுக்கு அன்னம் கொடுக்க, சுலபமாக, கண்ணன் செய்த லீலை. அதாவது, அந்த பாத்திரத்திலே,எத்தனை பேர் வந்தாலும் அன்னம் கொடுத்துவிடலாம். ஆனால் அதை கழுவிட்டால்,பிறகு அன்று பூராவும் யாருக்கும் அன்னம் கொடுக்க இயலாது.

அப்படி ஒரு நாள் துர்வாச முனிவர் வந்து, உடன் திரௌபதியிடம் தனது சிஷ்யர்களுக்கும் சேர்த்து உணவு அளிக்கவேண்டும் என்று வந்தார்.சோதனையாக, எல்லாம் முடிந்தபிறகு வந்ததால் திரௌபதியால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இருந்தபோதிலும் நீங்கள் போய் குளித்துவிட்டு வந்துவிடவும் என்று சொல்லி, இறைவனை நினைத்தாள்

கிருஷ்ணன் வந்து விஷயத்தை அறிந்தான். அப்போது, கிருஷ்ணன் அக்ஷய பாத்திரத்தை எடுத்துவரும்படி சொன்னான். பாத்திரத்தை கழுவி வைத்தாகிவிட்டது என்று சொல்ல, பரவா இல்லை எடுத்து வா பாப்போம் என்று கிருஷ்ணன் சொல்ல, திரௌபதியும் எடுத்துவந்தாள்.

அப்போது பாத்திரத்தை சரியாக சுத்தம் செய்யாதகாரனத்தால் அதில் ஒரே ஒரு கீரை மட்டும் இருந்தது. அதை கிருஷ்ணன் சாப்பிட்டான். அப்போது துர்வாச முனிவருக்கும், அவரது சிஷ்யருக்கும், வயிறு நிரம்பி, ஏப்பம் விட ஆரம்பித்துவிட்டார்கள். துர்வாசர், தனது தவறை உணர்ந்து கிருஷ்ணரை வேண்டி பிறகு சென்றார்.

இப்படி நடந்த நாள்தான், சித்திரை மாதம் அமாவாசைக்கு மூன்றாவது நாள் அதாவது திருதியை என்றும்,அன்று அந்த பாத்திரம் வளரும் அதாவது அந்த சாப்பாடு வளரும் என்பதால் அக்ஷயம் என்று வந்தது. ஆகையால் இதற்கு அக்ஷய திருதியை என்று பழக்கத்தில் வந்தது.

இப்போது சொல்லுங்கள், இங்கு தங்கம் எங்கே சொல்லப்பட்டது.

Leave a comment