அனாதைக்கு தெய்வம் துணை

துர்வாச முனிவரை, விருந்து உபசாரத்துக்காக, துரியோதனன் அழைத்தான் ஒரு தடவை. எப்போதும் துர்வாசர், தனது சிஷ்யர்களை அழைத்துக்கொண்டுதான் வருவார்.தனியாக வரவே மாட்டார் . துரியோதனன், அவருக்கு விருந்து அளித்துவிட்டு,ஆசி வாங்கினான். அவருக்கும் மிக்க சந்தோசம். துர்வாசர், கேட்டார். உனது உபசரனையில் யான் திருப்தி அடைந்தோம். உமக்கு யாது விருப்பம் என தெரிவிக்கவும். அதை நிறைவேற்றுகிறேன் என்றார்.

இவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அப்படியானால், என்னை நீங்கள் ஆசிர்வதித்ததுபோல், பஞ்ச பாண்டவர்களையும் ஆசிர்வதிக்கவேண்டுமாய் கேட்டுக்கொண்டான்.அவரும் சரி என்று சொல்லிவிட்டு சென்றார். (துரியோதனனின் மனதில் ஒரு கெட்ட எண்ணம்.அதாவது, துர்வாசர், மிகவும் முன்கோபி. அதனால், பாண்டவர்களால் இவர்களை திருப்தி படுத்த இயலாது , அப்போது சபித்துவிடுவார் துர்வாசர். பிறகு என்ன துரியோதனனுக்கு வெற்றிவந்துவிடும் அல்லவா.இதுதான் கெட்ட எண்ணம்.)

இந்த அடைப்பு குறியை மனதில் தனியாக வைத்துக்கொள்ளவும்.இதை வெளிப்படையாக துர்வாசரிடம் கூரமுடியாதுதானே அன்பர்களே. இப்போது துர்வாசர், தர்மர் இருக்கும் இடத்துக்கு ஒரு நாள் போகிறார். போகும்போதே , மிகவும் பசிக்கிறது, சீக்கிரம் சாப்பிடனும் என்று சொல்லிக்கொண்டே வருகிறார். திரௌபதியிடம் ஒன்றுமே இல்லை.ஆனால்,தர்மர், நீங்கள் போய், ஸ்நானம் செய்து உங்கள் பூஜையை முடித்துக்கொண்டு வாருங்கள். அன்னம் தயாராகிவிடும் என்று தர்மர் சொல்லிவிட்டார். தர்மருக்கு தெரியாது உள்ளே எதுவும் இல்லை என்று.(நாமும் அப்படித்தான், வீட்டில் கேட்காமலேயே நாமே சில முடிவுஎடுப்போம் அல்லவா)

திரௌபதிக்கு இப்போ ஒரே கவலை. துர்வாசர், மிகவும் கோப குணம் உள்ளவர் என்ன செய்வது என்று தெரியவில்லை. அதாவது ,ஏற்கனவே,கிருஷ்ணன் ,இவர்களுக்கு ,அக்ஷய பாத்திரம் ஒன்று கொடுத்து இருக்கிறான்.இந்த பாத்திரத்தில் இவர்கள் என்ன நினைக்கிறார்களோ அது வந்துகொண்டே இருக்கும். ஆனால் மதியம் பன்னிரண்டு ஆகிவிட்டால் வராது.சூரியன் உதிக்கும் காலம் மட்டுமே இது பயன்படும் அன்பர்களே.

அன்று தற்செயலாக துர்வாசர், வந்த நேரம் பன்னிரண்டுமணி ஆகிவிட்டது. இனி அந்த பாத்திரத்தில் சாப்பாடு வராது என்ன செய்ய ஒன்றும் புரியவில்லை. உடன், திரௌபதி, ஆபத்பாந்தவா, அனாதரக்ஷகா, கிருஷ்ணா, கோவிந்தா, முராரே, நீதான் இந்த இக்கட்டில் இருந்து எங்களை காக்கவேண்டும் என்று கதற,நினைக்க, உருக, – அது வீணாகுமோ, ஒரு போதும் வீணாகாது. உடன் டக் கென்று கிருஷ்ணன் அங்கு வந்தான்.ஏன் என்றால் நினைத்தது, திரௌபதி என்று அல்ல, ஒரு தீவிர உண்மையான பக்த்தையும் ஆயிற்றே.

திரௌபதி விவரத்தை சொல்ல, இவ்வளவுதானே, என்று சொல்ல கிருஷ்ணன் மேல் கோபம் இவளுக்கு.பிறகு கிருஷ்ணன் சொன்னான். அந்த அக்ஷய பாத்திரத்தை எடுத்துவா என்றான். அதை கவுத்து வைத்துவிட்டேனே கிருஷ்ணா என்றாள். பரவா இல்லை எடுத்துவா என்றான் கண்ணன் .எடுத்துவந்தாள். முன் செய் புண்ணியம், அன்று தற்செயலாக, பாத்திரத்தை சரியாக கழுவ வில்லை திரௌபதி ,அதனால் அதில் ஒரே ஒரு கீரை பருக்கை மட்டும் இருந்ததை கண்டான் மாயக்கண்ணன்.

இப்போ அந்த பருக்கையை ,கிருஷ்ணன் சாப்பிட, அங்கே குளித்துக்கொண்டு இருந்த துர்வாச முனிவருக்கும், அவரது பத்தாயிரம் சிஷ்யருக்கும்,உடன் சாப்பிட்ட திருப்தி ஏற்பட்டு ஏப்பம் வந்துவிட்டது . குளித்துவிட்டு வந்தார்கள். அங்கே கிருஷ்ணன் இருப்பதை கண்ட துர்வாசர், நடந்ததை மாயக்கன்னால், தெரிந்துகொண்டு, துரியோதனின் சூழ்ச்சியை புரிந்துகொண்டு, அதற்க்கு வருத்தம் தெரிவித்து, இப்போ, பாண்டவர்களுக்கு துர்வாசர், ஆசீர்வாதம் செய்தார். கண்ணன் இருக்கும் இடம் வெற்றிபெறும்.என்றார்.

பஞ்சபாண்டவர்கள், ஜெயித்ததற்கு காரணம், இது போல் பல மகான்களின் ஆசிர்வாதமும், கிருஷ்ண பக்தியினால், தெய்வ அனுகிரகமும்தான் காரணம்.

அதனால்தான் ஒரு பழமொழி வந்தது.,

அனாதைக்கு தெய்வம் துணை என்று.

ஆகவே, நேர்மையாக இருங்கள், உங்களுக்கு என்றுமே மொத்தத்தில் வெற்றிதான் அன்பர்களே.