அபிசெகங்களும் அதன் பலன்களும்

அன்பர்களே.நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் சரியே.எல்லா ஊரிலும் சிவன் கோயில் இருக்கிறது.விஷ்ணு கோயில் இருக்கிறது. அதைபோல் வசதி இருப்பின் , நீங்கள் எந்த ஊர் கோயிலை வேண்டுமானாலும் தேர்ந்து எடுக்கலாம்.

வாழ்க்கையில், உங்களுக்காகவும், உங்கள் வம்சத்துக்காகவும், நீங்கள் ஒரே ஒரு தடவை கீழ்கண்ட படி அபிஷேகம் செய்துவிடவும்.

ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல், உங்களை நல்லமுறையில் இன்று வரை வைத்து இருக்கிறான் இல்லையா. அதற்காக ஒரே ஒரு தடவை செய்துவிடவும். இதற்குத்தான் நன்றி என்று பெயர்.

நமக்கு பல குறைகள் இருக்கிறது.ஆனால் நிறைகளை நாம் கவனிப்பதில்லை. கண் காது மூக்கு வாய் கை கால்கள் உடலில் உள்ள உறுப்புகள் நல்லமுறையில் இயங்குகிறது . இப்படித்தான் எல்லோருக்கும் இருந்தது.அப்போது கடவுளை நாம் வணங்கவில்லை . பிறகு அந்திம காலத்தில் சரியில்லை என்று கோயிலுக்கு ஓடி என்ன பிரயோசனம்./

அபிஷேக விவரங்களும் அதன் பலன்களும்:

அரிசி மாவு – தீவினை போகும்.
மஞ்சள்பொடி – அரசாங்க சம்பந்த வேலைகள் வெற்றி
பஞ்சாமிர்தம் -செல்வ நிலை உயரும்.
பஞ்சகவ்யம் -தெய்வீக விஷய சாதனை
பால் – நீண்ட ஆயுள் தரும்
தயிர் – புத்திர பாகியம் கிடைக்கும்
பசு நெய் – இனி பிறவி இல்லை
தேன் – குரல் வளம் நன்கு இருக்கும் .பாட்டுக்கு நல்லது
கருப்பஞ்சாறு -அளவற்ற இன்பம்
சர்க்கரை -உங்கள் எதிரிகளை ஓட ஓட விரட்டும்
வாழைபழம் – அமோக விளைச்சல் உண்டாகும்
பலாப்பழம் – நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுக்குத்தான் மதிப்பு .வசீகரம் உண்டாகும்.
எலுமிச்சம்பழம் – உங்கள் வியாதி போகும்
பச்சரிசி சாதம்(அன்னம்)-ராஜ கெளரவம் கிடைக்கும் உங்களுக்கு
இளநீர் -சொன்னதை கேட்கும் அறிவாற்றல் உள்ள குழந்தை
கோரோசனை – நீண்டால் ஆயுள் தரும்
பச்சை கற்பூரம் – மன நிம்மதி
பன்னீர் – தெய்வ உலகில் வாழும் பேறு கிடைக்கும்
சந்தனக்குழம்பு – ஞானம் கிடைக்கும்

Leave a comment