அரசு உத்தியோகம் யாருக்கு ?

இது ஒரு பொதுவான பதிவு. இதுவே முடிவு இல்லை. இருந்தாலும் இது அனுபவத்தில் ஒத்துவருகிறது

பத்தில் ராகு இருந்து, அந்த வீட்டின் அதிபதி லக்னத்தில் இருப்பது.

பொதுவாக அனைத்து லக்னங்களுக்கும் இது பொது.

உங்கள் லக்னத்துக்கு பத்தாம் இடத்து அதிபதி , கீழ்கண்டபடி, ராசியிலோ அம்சத்திலோ இருக்கிறார்களா என்று பார்க்கவும். ஆறு எட்டு பன்னிரெண்டில் மறையக்கூடாது .

1.மேல்சொன்ன அதிபதி ,சூரியனுடன் சேர்ந்து மறையாமல் இருத்தல்

2. சந்திரனுடன் சேர்ந்து மறையாமல் இருத்தல்

3.சூரியனுடைய பார்வையில் இருப்பது

நான்கு. சந்திரனுடைய பார்வையில் இருப்பது.

5.சூரியன் வீட்டில் இருப்பது

6.சந்திரனின் வீட்டில் இருப்பது

இதில் ஏதாவது ஒரு விஷயம் அமைந்தால் 90% நம்பலாம்.

எதுவும் மறையக்கூடாது .மறைந்தால், கிடைத்த வேலை நிரந்தரம் ஆகாமல் இழுவையாக சில பேருக்கு அமையும். சில பேர் தவறு செய்துவிட்டு பாதியில் வந்துவிடும் அமைப்பு வந்துவிடும். ஆகவே அந்த மாதிரி உள்ளவர்கள், பொறுமையாக இருந்து தக்க வைத்துக்கொள்ளவேண்டும்