அஷ்டபதி பகுதி-1

பதி என்றால் புருஷோத்தமன். அதாவது புருஷன் ஆவான். இந்த உலகத்தில் ஒரே ஒரு ஆண்தான் அவனே இந்த கிருஷ்ணன். மீதி அனைவரும் பெண்களே ஆகும். இந்த உலகத்தில் ஆண் பெண் என்று இருக்கிறபடியால், அது ஒரு மாயை ஆகும். உண்மையில் புருஷன் ஒருவனே. இந்த தத்துவத்தை புரிய வைக்கவேண்டும்.
பாரத தேசத்திலே, ஒரிஸ்ஸா மாநிலத்திலே,தலைநகர் புவனேஸ்வரில் இருந்து சுமார் அறுபது மைல் தொலைவில் அமைந்துள்ளது .புரி க்ஷேத்திரம். இங்கு கிருஷ்ணன் ஜகன்னாதராக இருக்கிறார்.
இந்த கோயிலுக்கு சில மைல் தொலைவில் ஒரு கிராமத்தில், ஒரு அந்தணர் இருந்தார்.இவர் பெயர் ஜெயதேவர் என்பதாகும்.
இளம் வயதிலேயே வறுமை, பிரிவு போன்ற அனைவருக்கும் உள்ளதுபோல் சிரமங்கள். இவர், வைதீகத்தில் உள்ள அனைத்தும் படித்து சாஸ்திரிகளாக பணியாற்றிவந்தார்.
ராமாயணம் பாகவதம்,உபநிஷத் வேதம் எல்லாம் அத்துப்படி ஆகும் இவருக்கு.யாரிடமும் அதிக காசு பெறாமல் தனக்கு தேவையானதை மட்டும் தினமும் பெற்று வாழ்ந்து வந்தார். அனாவசியமாக யாரிடமும் அதிகம் வாங்குவதோ, அல்லது சேமித்து வைப்பதோ இவரிடம் கிடையாது.
வேலைகளுக்கு சென்று கொண்டு வரும்போது சில நேரம் ஓய்வு நேரத்தில், கிருஷ்ணனிடம் பக்தி பரவசமாக தன்னை உணர்ந்து, பூஜை செய்துகொண்டு வாழ்ந்துவந்தார்.
அந்த சமயத்தில்தான், அவருக்கு தோன்றியது, எதாவது ஒரு காவியம் செய்யவேண்டும் என்று. கிருஷ்ணா சங்கல்பத்தினால் இதை அதிகம் இவர் ஈடுபாடுகொண்டபோது, சாஸ்திரிகள் வேலைக்கு அடிக்கடி செல்லமுடியாத நிலையில் வந்துவிட்டார். காசு இல்லாததால் வறுமை என இருந்தாலும், அதை பற்றி அவர் கவலைப்படவில்லை

Leave a comment