அஷ்டபதி பகுதி-2

இவ்வாறு ஜெயதேவர் அன்றாடம் தனது கடமைகளை சரிவர செய்துவந்தார். இவரது வீடு, மண் சுவரால் நான்கு பக்கமும் கட்டி சைடு மற்றும் மேல்பாகம் கூரையால் மேயப்பட்டு இருந்தது. ஒரே ஒரு ஹால் போல் அந்த வீடு. இதில்தான் அவர் வாழ்ந்தார்.

காசு சேர்த்து வைக்க மாட்டார். அன்றாடம் தேவை என்னவோ அதை மட்டுமே வாங்கிக்கொள்வார்.அதுவும் தக்ஷினையாகத்தான்.சும்மா வாங்கமாட்டார்.

அப்பா அம்மா சிறுவயதிலேயே இல்லாமல் போனதால், இவருக்கு சொந்தபந்தங்களும் அவ்வளவாக அடரு கிடையாது. திருமண நினைப்பே இன்னும் வரவில்லை.

அப்போது, இவர், கிருஷ்ணனின் பிருந்தாவன லீலைகளை கிரந்தமாக எழுத ஆசைபட்டார்.

இது மனித வாழ்க்கைக்கு மிகவும் பயன் உள்ளதாக அமையவேண்டும் என்று எண்ணி எழுத ஆரம்பித்தார்.

பதி என்றால் புருஷோத்தமனான கிருஷ்ணன் என்பதாலும்,ஒவ்வொரு பாட்டும் எட்டுவரிகளிலே இருக்கவேண்டும் என்று நினைத்ததால், அஷ்டம் = எட்டு , பதி=கிருஷ்ணன் என்பதால் இதற்கு அஷ்டபதி என்று பெயர் வைத்தார்.

Leave a comment