அஷ்டபதி பகுதி-3

பகவான் புருஷோத்தமனை பற்றி ஒரு காவியம் எழுதுவதற்காக தன்னை தயார் படுத்தினார். நியமங்களுடன் நித்திய விரதம் இருந்து, கண்ணனே கதி என்று நினைத்து எழுத ஆரம்பித்தார்.

இந்த நேரத்தில் ஒரு நாள் காலை அந்த ஊரில் இருக்கும் வேறு ஒரு அந்தன குடும்பத்தை சேர்ந்தவர்,ஜகன்னாதர் ஆலயத்துக்கு சென்று தனது பெண்ணிற்கு திருமணம் நடக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டார். எதோ ஜன்மாந்திரத்தில் அவர் புண்ணியம் செய்திருந்தபடியால், அன்று இரவு அந்த அன்பரின் கனவில் வந்து, உனது பெண்ணிற்கு ஏற்ற மாப்பிள்ளை இங்கு இருக்கிறார் என்று ஜெயதேவரை போய் பார்க்கும்படி சொன்னார்.

அதிகாலையில் கண்ட கனவு பலிக்கும் என்பதால் நம்பிக்கை கொண்டு,ஜெயதேவரை தேடி கண்டுபிடித்து, தனது மகளை நீங்கள் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று நடந்தவைகளை விடாமல் எடுத்து சொன்னார்.

ஜெயதேவர் ஒப்புக்கொள்ளவில்லை.எதனால் என்றால், முதலிலேயே அவருக்கு அதில் விருப்பம் இல்லை என்பதாலும், அடுத்து, அந்த இறைவன் தன்னிடம் எதுவும் கூறவில்லை என்பதனால் மறுத்துவிட்டார். கோயில் குருக்கள் சொல்லியும் கேட்கவில்லை.

பிறகு அந்த அந்தணர் அங்கிருந்து தனது மகளை அழைத்துக்கொண்டு செல்லும் சமயத்தில் அந்த பெண் வர மறுத்துவிட்டாள். நான் இங்கேயே இருந்து ஜெயதேவர் ஒப்புக்கொள்ளும்வரை நான் இந்த இடத்திலேயே இருப்பேன். கடவுள் விட்ட வழி என்று தனது தகப்பனாருடன் செல்ல மறுத்துவிட்டாள்.

வழக்கம்போல் ஜெயதேவர் தனது வீட்டில் இருக்க, இந்த பெண் அந்த தெருவிலேயே இருந்தபடியால், இதை ஜெயதேவர் கவனிக்கவில்லை. எதனால் என்றால் அவருக்கு அதில்தான் நாட்டமே இல்லையே அதனால்தான்.

இப்போது இந்த பெண் தினமும் அதிகாலையில் ஜெயதேவர் எழுந்திருக்கும் முன்பே, தெருவில் உள்ள அந்த பெண், ஜெயதேவர் வீட்டு வாசலை கூட்டி, பெருக்கி மொழுகி, கோலம் போட்டு விடுவாள்.

காலை ஜெயதேவர் இதை பார்த்துடன் ஆச்சர்யபட்டுபோனார் .யார் இந்த வேலையை செய்தது. என்று. இப்படியே இரண்டு மூன்று நாட்கள் செல்ல, ஒரு நாள் அதிகாலையில் வாசலுக்கு வந்தபோது இந்த பெண் வேலை செய்வதை கண்டு திடுக்கிட்டு,அந்த பெண்ணை கடிந்து கொண்டார். உங்கள் அப்பாவீட்டுக்கு அன்றே போகசொன்னேனே .எனது மானம் என்ன ஆகும். எதற்காக நீ போகாமல் இங்கு என்ன செய்கிறாய் என்று கோபித்துக்கொள்ள , அதை பத்தி அந்த பெண் கவலைபடாமல்,ஜகன்னாதரின் உத்தரவை என்னால் மீற இயலாது .அதனால், நான் உங்கள் வீட்டுக்கு வரவில்லையே. வாசலை சுத்தம்தானே செய்கிறேன் என்று பதில் சொல்ல, இப்படியே இரண்டு நாட்கள் சென்றது.

ஒரு நாள் ஜெயதேவர், கிருஷ்ண பரமாத்மாவின் விருப்பம் அதுவானால் அதை ஒப்புக்கொள்வதாக சொல்லி, பிறகு பெரியவர்களுக்கு தகவல் கொடுத்து ஊரறிய , அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார் . அந்த பெண்ணின் பெயர்தான் பத்மாவதி என்பதாகும்.

தொடரும்

Leave a comment