அஷ்டபதி பகுதி-4

திருமண வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கும் நாட்களில், தினமும் ,தனது ஓய்வு நேரத்தில் பாட்டுக்களை எழுதி பிறகு அதற்க்கு அபிநயம் செய்வார். அப்படி செய்யும்போது பத்மாவதியும் கணவருடன் முழு ஒத்துழைப்புடன் தானும் நடனம் ஆடுவாள். அந்த பாட்டுக்கு ஏற்ப .

இதனால் ஜெயதேவருக்கு பத்மாவதியின் மேல் முழு திருப்தி நிலவியது. இப்படியா நாட்கள் போய்கொண்டிருக்கும்போது ஒரு நாள், ஜெயதேவர் பதினெட்டு பாட்டு எழுதிவிட்டார். அடுத்தது எழுதும்போது, அவருக்கு சில கவிதைகள் எழுதி அதை திரும்ப படித்து பார்க்கையில் அது தவறாக இருப்பதை உணர்ந்தார். அதாவது , ராதையின் காலை கிருஷ்ணன் தனது தலையின் மேல் வைத்தான் என்று எழுதிவிட்டார். இது இவருக்கு உடன்பாடு இல்லை.

சரி என்று சொல்லிவிட்டு ,ஒலைசுவடியையும் எழுத்தாணியையும் அப்படியே வைத்துவிட்டு, பிறகு எழுதிக்கொள்ளலாம் என்று, முந்தைய எழுத்துக்களை நீக்கம் செய்துவிட்டார்.

வாராவாரம் எண்ணெய் தேய்த்து குளிப்பது அவரது வழக்கம் என்பதால் பத்மாவதியை கூப்பிட்டு குளித்துவிட்டு வந்து பிறகு எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டு குளிக்க சென்றுவிட்டார்.

இந்த நேரத்தில்,பத்மாவதிக்கு புண்ணியம் இருந்ததால்,ஒரு சம்பவம் நடைபெறுகிறது.அதாவது, எண்ணெய் தேய்த்துக்கொண்ட உடம்புடன் குளிக்கசென்றவர், மறுபடியும் வந்து, எழுத்தாணியை கேட்டு எழுதுகிறார். மறுபடியும் சென்று விட்டார்.

இந்த இடத்தை மறக்காமல் படியுங்கள்.

பிறகு குளித்துவிட்டு வந்தவுடன் பூஜைகளை முடித்துவிட்டு, மறுபடியும் எழுதுவதற்காக வந்தார்.
இப்போது அவர் திடுக்கிட்டார், எதனால் என்றால் எந்த வரி அபசகுனமாக உள்ளது என்று அழித்துவிட்டு பிறகு எழுதலாம் என்று சென்றாரோ, அதே வரி அங்கு எழுதியிருப்பதை கண்டார். மனைவியை கூப்பிட்டு , நான் குளிக்க சென்றாபோது யார் இதில் எழுதினர் என்று கேட்டார். பத்மாவதி, நீங்கள் தானே குளிக்க சென்றவர் பாதியில் வந்து மறந்துபோய்விடும் என்பதால் எழுதிவிட்டு சென்றீர்கள் என்றாள்.

என்ன உளறுகிறாய். குளிக்க சென்றவன் நான் ஏன் பாதியில் வந்து எழுதுகிறேன் எனக்கு என்ன பைத்தியமா என்று கேட்க இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை./

அப்போதுதான் அவர் புரிந்துகொள்கிறார். கிருஷ்ணன் இந்த எழுத்தை விரும்புகிறான் போல அதனால் அவனே வந்துதான் ஜயதேவர் உருவில் வந்து எழுதி இருக்கிறான் என்று இவர்களுக்கு ஆனந்தம் பொங்க கோயிலுக்கு சென்று வழிபட்டனர். கனவில் வந்து சுவாமி சொன்னான். எனக்கு அதுவே பிடித்து இருக்கிறது என்பதால்தான் நானே வந்து எழுதினேன் என்று சொல்ல ஆனந்த கண்ணீர் பெருகி இரண்டு பேருக்கும் மேலும் பக்தி அதிகம் ஆனது. தொடரும்

Leave a comment