அஷ்டபதி பகுதி-5

இதுபோல் சுவாரஸ்யமாக போய்கொண்டிருந்த நேரத்திலே ஒரு சிறு சோதனை வந்தது. அதாவது இவர் எழுதிய பாட்டை கோயிலில் கொண்டு சென்று அங்கே அரங்கேற்ற வேண்டும் என்கிற ஆசையில் சென்றபோது,
அந்த கால வழக்கப்படி , ராஜாவிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்பதால்,இந்த செய்தியை தெரிவித்தார்கள்.

இந்த நேரத்தில்தான், ராஜாவும் இதுபோல் கிருஷ்ணரின் பெயரில் பாட்டு எழுதியிருப்பதாக தெரிந்துகொண்டார்கள். என்னதான் ஜெயதேவர் எழுதினாலும், ராஜாவிற்கு கட்டுப்பட்டவர் என்பதால், ராஜா எழுதியதையும் கோயிலுக்கு கொண்டு வந்தார்கள்.

இப்போது குருக்களுக்கு தர்ம சங்கடமாக போய்விட்டது. என்ன செய்வது. நடு நிலையாக இருக்கவேண்டுமே.ஆகையால் தீர்ப்பை ஜகன்னாதனே சொல்லிவிடட்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள்.

ராஜாவிடமும் கெட்டபெயர் வந்துவிடக்கூடாது. பிராமண சாபமும் வந்துவிடக்கூடாது.ஆகவே கோயில் குருக்கள் ஒரு யோசனை சொன்னார். அதை அனைவரும் ஒப்புக்கொண்டார்கள்.

அதாவது,ஜெயதேவர் எழுதியதை ஒரு பக்கமும் அதற்க்கு பக்கத்திலேயே ராஜா எழுதியதையும் தனித்தனியாக, கோயிலில் உள்ள கர்ப கிரகத்திற்குள், இரண்டையும், கிருஷ்ணரின் இரண்டு காலுக்கு பக்கத்தில் தனித்தனியாக வைத்துவிட்டு, கோயிலை பூட்டி சீல் வைத்துவிட்டு வெளியேறினார்கள்.

இரவு ஜெயதேவருக்கும், ராஜாவிற்கும் தூக்கமே வரவில்லை. அந்த காலத்து ராஜாக்கள் சிலபேர் பக்தியுடன் நேர்மையானவர்களாக இருந்தார்கள் ஆகையால் அதிக சிரமம் கிடையாது.

மறுநாள் காலை நடை திறக்க அர்ச்சகர் வந்துவிட்டார். பொதுமக்கள், ஜெயதேவர், ராஜா அனைவரும் ரெடி . கோயில் நடை திறக்கபோகிரார்கள். என்ன நடக்குமோ என அனைவரும் நினைக்கின்ற வேளையில், ராஜா எழுதிய மந்திரங்கள், வைத்த இடத்திலேயே இருக்க, ஜெயதேவர் எழுதிய அஷ்டபதி மட்டும், கிருஷ்ணரின் தலையில் இருப்பதை கண்டுஆச்சர்யப்பட்டார்கள். சிலவைகள் சிதறிக்கிடந்தன.

ராஜா கிருஷ்ணரின் தீர்ப்பை தலைமேல் ஏற்றுக்கொண்டு,ஜெயதேவர் எழுதியதே சிறந்தது என்பதை ஒப்புக்கொண்டார். ராஜாவிற்கு வருத்தம் எதுவுமில்லை.

கெட்டாலும் என்றும் மேன்மக்கள் மேன்மக்களே, என்பதுபோல,ஜெயதேவர் உடன் ஆசைபடாமல், ராஜா எழுதியதும் சிறந்ததுதான் என்று சொல்லி, இவர் எழுதிய, அஷ்டபதியில், நடுநடுவே, ராஜாவின் கருத்துகளையும் சேர்த்து வெளியிட்டார் என்றால், ஜெயதேவரின் மனசையும், கிருஷ்ண பக்தியையும் நீங்களே தெரிந்துகொள்ளுங்கள். தொடரும்

Leave a comment