அஷ்டபதி பகுதி-6

ராஜாவிற்கு மிகவும் ஜெயதேவரை பிடித்துபோய்விட்டபடியால் , தாங்கள் இந்த குடிசையில் இருந்து சிரமப்படவேண்டாம், எனது அரண்மனைக்கு வந்துவிடுங்கள் என்று சொன்னார். ஆனால் இதை முதலில் நிராகரித்த ஜெயதேவர் பிறகு சில நாட்கள் சென்று ஒப்புக்கொண்டார். அப்போது ஒரு நிபந்தனை ஒன்றையும் அரசரிடத்தில் தெரிவித்தார்.

எனது பூஜைக்கும் ஆசார அனுஷ்டானத்துக்கும் எந்தவித தொந்தரவும் வரக்கூடாது. என் இஷ்டம்போல்தான் நான் அரண்மனையில் இருக்க இயலும் என்பதால், யாராவது அதற்கிடையில் இடையூறுகள் செய்வதாக உணர்ந்தால் அந்த நிமிடமே நான் அரண்மையை விட்டு வந்துவிடுவேன் என்று சொன்னார். ராஜாவும் அதற்க்கு சம்மதித்தார்.

இப்போது ஜெயதேவருக்கும் பத்மாவதிக்கும் அரண்மனையின் தனி இடம் கொடுத்து அவர்களின் சௌகரியம்போல் இருக்க இடமும் வசதிகளும் செய்துகொடுத்து விட்டார்.

காலம் சிலநாள் ஓடிக்கொண்டிருந்தது. ராஜாவும் ஜெயதேவரும் இப்போது நன்கு புரிந்துகொண்ட நண்பர்கள்போல் இருந்துவந்தனர். ஒரு தடவை வேட்டையாட செல்கிறபோது ஜெயதேவரையும் அழைத்துபோக எண்ணம் கொண்டார்.

இரண்டு நாட்களில் வந்துவிடுவதாக சொல்லி, பிறகு சம்மதித்து சென்றார்கள்.

இதற்குள், ராணியும் பத்மாவதியும் நண்பர்கள் போல் ஆகிவிட்டார்கள். பத்மாவதி சில சமயம் மனம் வருந்தி காணப்படும்போது ராணி காரணத்தை கேட்க, ஜயதேவரின் பிரிவு சிரமாக இருக்கிறது.ஆகையால்தான் அவர் வந்த உடன் சரியாகிவிடும் என்று உண்மையான தம்பதிகளின் லக்ஷணத்தை ராணியிடம் தெரிவித்தாள். உண்மையான குடும்பத்தில், உண்மையான விச்வாசமுள்ள தம்பதிகள் கணவனின் பிரிவு தாங்கமுடியாத துக்கம் என்று உணரவைத்தாள் பத்மாவதி / மகாராணிக்கு இதில் நம்பிக்கை இல்லை.ராணியோல்யோ,அதனால் அப்படித்தான் தோன்றும்.

ராணிக்கு ஒரு எண்ணம் தோன்றியது.குறுக்கு புத்தி. அதாவது கணவனை பிரிந்தால் தாங்கமுடியாது என்பது எந்த அளவு உண்மை என்கிறது தெரியாதபடியால் ராணி பத்மாவதியை சோதனை செய்து பார்க்க ஆசைபட்டாள்.
தொடரும்

Leave a comment