அஷ்டபதி பகுதி-7

ராஜா இல்லாத காரணத்தால், ராணி, மந்திரியை அழைத்து ஒரு நாடகம் ஆட திட்டம் போட்டாள்.

அதாவது, ராஜாவிடம் இருந்து தகவல் வந்ததாகவும், அதில் ஜெயதேவர் வேட்டை ஆட சென்ற இடத்தில் மரணம் அடைந்துவிட்டதாக, தத்ரூபமாக வந்து சொல்லவேண்டும் என்று ஆணை இட்டாள். இது ஒரு விபரீத ஆசையாக இருக்கிறது என்பதை ராணியால் அந்த நேரத்தில் உணரதெரியவில்லை. விளையாட்டாக சோதிக்கவே இதை செய்கிறாள் என்பதே அவளது நினைப்பு ஆகும்.

மறுநாள் அதேபோல் ,மந்திரி , சபையில் வந்து பத்மாவதியும் ராணியும் சேர்ந்து இருக்கும் சமயத்தில் வந்து தெரிவிக்கிறார். இதை கேட்ட பத்மாவதி உடன் மூர்ச்சையாகி கீழே விழுந்துவிடிகிறாள் . ராணி இதை சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. பத்மாவதிக்கு இந்த நிலை ஆகி இறந்துபோனாள் என இவர்கள் நினைத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர்.

விளையாட்டு வினையாக போய்விட்டதே , ராஜாவிற்கு என்ன பதில் சொல்வேன். ஜெயதேவருக்கு என்ன பதில் சொல்வேன் என மிக்க வேதனை அடைந்தாள்.

அரண்மனை மருத்துவரை வரவழைத்து என்னென்னமோ செய்து பார்த்தும் பத்மாவதி எழுந்திருக்கவில்லை. இப்படி இருக்கும் சூழ்நிலையில், ராஜாவும், ஜெயதேவரும், வந்துகொண்டு இருக்கிறார்கள் என சிப்பாய்கள் தகவல் தர, வெலவெலத்துப்போனால் ராணி.

ராணி ராஜாவிடம் நடந்ததை தெரிவிக்க, ராஜாவிற்கு கோபம் அதிகமாகி, ஜெயதேவர் தன்னை சபித்துவிடுவார் என்ன செய்வது என்று தவித்துக்கொண்டிருப்பதை பார்த்த ஜெயதேவர், இப்போதுதானே நாம் எல்லாம் ஒன்றாக வந்தோம், நீங்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள் என கேட்க நடந்தவைகளை விடாமல் அவரிடம் தெரிவித்தார்கள்.

இவர்கள் எல்லாரும் பயந்தமாதிரி , ஜெயதேவர் கோபப்படாமல், மெதுவாக தெரிவித்தார். அதாவது,எனது மனைவி, நான் இல்லாமல் இருக்கும்போது அவள் சாக முடியாது என்று கூறி, மேலும் பத்மாவதி இருக்கும் இடத்திற்கு செல்கிறார்கள்.

அங்கு பத்மாவதியை தனது மடிமேல் வைத்து ,-‘ப்ரியே”
என மெதுவாக கூப்பிடுகிறார்.ஜெயதேவர் பத்மாவதியை எப்போதும் இதுபோல்தான் கூப்பிடுவார்.

பிறகு,அஷ்டபதியில், நான் முன்பே தெரிவித்தேனே, அதாவது எந்த வரியை எழுதவேண்டாம் என்று விட்டாரோ, அதே வரியை கிருஷ்ணனே வந்து எழுதினர் என்று சொன்னோம் அல்லவா, அதாவது பத்தொன்பதாவது அஷ்டபதி . அந்த பாட்டை பாடினார்.

வதஸி யதி கிஞ்சிதபி தந்தருசி கௌமுதி , ஹரது தர திமிரம் அதிகோரம்

ப்ரியே சாருசீலே , ப்ரியேசாருசீலே

என்று அந்த பாட்டு முழுவதும் பாடிக்கொண்டிருக்க, ஜெயதேவர், ப்ரியே என்று பாடும்போது, பத்மாவதியின் காதுக்கு கிட்ட சென்று சொன்னார். என்ன ஆச்சர்யம் , அப்போது பத்மாவதி, தூக்கத்தில் இருந்து எழுந்தவள் போல் எழுந்தாள் அன்பர்களே.

அப்போது சொன்னார் ஜெயதேவர்.ஒரு உண்மையான அன்யோன்யமாக தம்பதிகள் வாழ்ந்து வந்தால், கிருஷ்ணா பக்தியால்,எதையும் சாதிக்கலாம் என்று சொல்லி, அனைவரையும் சந்தோஷப்படுத்தி ஆச்சர்யப்படுத்தினார் ஜெயதேவர்.

ஆகவே ப்ரியே அதாவது ப்ரியா என்று பெயர் வைத்தல்மட்டும் போதாது. இதுபோல் எந்த தம்பதியர் இருக்கிறார்களோ, அந்த கணவன்தான் ப்ரியே என்று தனது மனைவியை அழைக்கமுடியும் அன்பர்களே.

ஆகவே அஷ்டபதி என்பது ஒரு மருந்து .இது எங்கு ஒலிக்கிறதோ , அங்கு ஜெயதேவர், பத்மாவதி, ராதையும் கிருஷ்ணனும் வந்து இருந்து அவர்களை காப்பாற்றுகிறார்கள் .

ஆகவே நீங்கள் உங்கள் வீட்டில் அஷ்டபதியை தினமும் பாடிக்கொண்டு இருங்கள்.எல்லாம் கிருஷ்ண கிருபையால் சரியாகிவிடும்.

தொடரும்…

Leave a comment