ஆனந் வாதம் புனல் வாதம் அர்த்த வாதம் ஒரு விளக்கம்

அனல் வாதம், புனல் வாதம், அர்த்த வாதம் என்று மூன்று வாதங்கள் இருக்கிறது.

சங்க காலத்திலும் அதற்க்கு முன்பும் இவைகள் கையாளப்பட்டு இருக்கின்றன.

புனல் வாதம்:
இந்த காலம் போல் அந்த காலத்தில் உடன் மேடை ஏறிவிடமுடியாது. அதற்க்கு என்று முறைகளை கையாண்டு பிறகுதான் முடியும். அவ்வளவு சிரமமான காலங்கள். அதனால்தான் அதில் ஒரு தரம் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு கவிஞர் , தனது கவிதையை பிரபலப்படுத்தவேண்டும் என்றால், மன்னரின் தலைமையில், பெரிய குளத்தில் அந்த ஓலைசுவடிகளை கட்டு கட்டாக இருப்பதை அப்படியே தூக்கிபோட்டு விடுவார்கள்.

சபைகளில் சிலபேர் பொறாமையினால் கூட மதிக்காமல் இருக்கலாம் என்பதனால், இப்படி ஒரு ஏற்பாடு செய்வார்கள்.

அதுசமயம் , அந்த ஓலைசுவடிகள் , மூழ்கிப்போகாமல், கரை ஒதுங்கி வந்தால் அதை ஆண்டவன் ஒப்புக்கொண்டுல்லான் என்று அதை பப்ளிக்காக பிரகடனப்படுத்துவார்கள்.

 

அனல்வாதம்:
இந்தமாதிரித்தான், எது விஷயமோ அதை ஹோமத்தில் இட்டு விடுவார்கள். அது பஸ்மம் ஆகாமல் இருந்தால் கடவுளின் ஒப்புதலாக எடுத்துக்கொள்வார்கள்.

 

அர்த்தவாதம்:
சபைகளிலே, உண்மையை புறம் தள்ளி,பகட்டுக்காக,உண்மை அல்லாததை [பேசுவார்கள்.

காலம் காலமாக சில விஷயங்கள் இப்படி நடைபெற்றது .

உங்களில் சில பேருக்கு தெரிந்து இருக்கலாம், சில பேருக்கு தெரியாமல் இருக்கலாம். இது ஒரு புரிந்துகொள்ளவே எழுதியது ஆகும்

Leave a comment