ஆயுள் பாவம்

ஆயுள் பாவத்தை நிர்ணயிப்பதில் குருவுக்கு முக்கிய அம்சம் உண்டு. ஒரு ஜாதகத்தில், லக்கினத்தை குரு பார்க்கவேண்டும். அல்லது சந்திரனைக் குரு பார்க்கவேண்டும்.அல்லது ஆயுட்காரகனாகிய சனியைக் குரு பார்க்க வேண்டும். அல்லது8மிடமாகிய ஆயுள்ஸ்தானத்தைக் குரு பார்க்கவேண்டும்.அல்லது ஆயுட்காரகனாகிய சனி ஆட்சியோ அன்றேல் உச்சமோ பெற்றிருக்கவேண்டும்.அல்லது லக்கினாதிபனாவது ஆட்சி,உச்சம் பெற்றிருக்கவேண்டும். இதில் ஏதாவது ஒரு அம்சம் இருந்த போதிலும் நல்லஆயுள்உண்டு என்பது சுருதியின் கருத்து.