ஆய கலைகள்அறுபத்திநான்கு

மொத்தம் அறுபத்திநான்கு கலைகள் பாகவதம் போன்ற புராணங்களும் வேதங்களும் சொல்கின்றன.

இதில் ஒரு கலைகூட நம்மில் இருப்பது சிரமமே ஆகும்.

இந்த அனைத்தையும் அறுபத்திநான்கு நாட்களிலே, அதாவது ஒரு நாளைக்கு ஒரு கலை வீதம், சாந்திபணி குருவிடம், பகவான் கிருஷ்ணன் தனது குருகுல வாசத்தில் கற்றுக்கொண்டான்.

குசேலரும் கூடவே இருந்தார்.இவர் செய்த ஒரு தவறினால் அவருக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது .சரணாகதி தத்துவத்தின்படி, கிருஷ்ணனை சரண் அடைந்தஉடன் அவரது சிரமம் நீங்கியது.

ஆனால், நாமும் இரு கலைகளை கற்று இருக்கிறோம்.
இதில் இல்லாத அந்த இரு கலைகள் என்ன என்றால்.,

1.சொன்னாலும் தெரியாது புரியாது

2.சுயமாகவும் தெரியாது சிந்திக்க இயலாது

இதனால்தான் நமக்கு சிரமங்கள் வருகின்றன. பக்தி இல்லாததால்தான் நமக்கு சிரமமே வருகிறது

இப்போது இந்த கலைகளின் பெயரை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள்

1. அக்கரவிலக்கணம்
2. இலிகிதம்
3. கணிதம்
4. வேதம்
5. புராணம்
6. வியாகரணம்
7. நீதி சாத்திரம்
8. சோதிட சாத்திரம்
9. தர்ம சாத்திரம்
10. யோக சாத்திரம்
11. மந்திர சாத்திரம்
12. சகுன சாத்திரம்
13. சிற்ப சாத்திரம்
14. வைத்திய சாத்திரம்
15. உருவ சாத்திரம்
16. இதிகாசம்
17. காவியம்
18. அலங்காரம்
19. மதுரபாடனம்
20. நாடகம்
21. நிருத்தம்
22. சத்தப்பிரமம்
23. வீணை
24. வேணு
25. மிருதங்கம்
26. தாளம்
27. அத்திரப்பரீட்சை
28. கனகபரீட்சை
29. ரத பரீட்சை
30. கசபரீட்சை
31. அசுவபரீட்சை
32. ரத்திரனப்பரீட்சை
33. பூமிபரீட்சை
34. சங்ககிராம இலக்கணம்
35. மல்யுத்தம்
36. ஆகரூடணம்
37. உச்சாடணம்
38. விந்து வேடணம்
39. மதன சாத்திரம்
40. மோகனம்
41. வசீகரணம்
42. ரசவாதம்
43. காந்தருவவாதம்
44. பைபீலவாதம்
45. கவுத்துக வாதம்
46. தாது வாதம்
47. காருடம்
48. நட்டம்
49. முட்டி
50. ஆகாயப் பிரவேசம்
51. ஆகாய கமணம்
52. பரகாயப் பிரவேசம்
53. அதிரிசயம்
54. இந்திரசாபம்
55. மகேந்திரசாபம்
56. அக்கினித்தம்பம்
57. சலத்தம்பம்
58. வாயுத்தம்பம்
59. நிட்டித்தம்பம்
60. வாக்குத்தம்பம்
61. சுக்கிலத்தம்பம்
62. கன்னத்தம்பம்
63. கட்கத் தம்பம்
64. அவத்தைப் பிரயோகம்.

குசேலர் செய்த தவறு
====================

குருகுலத்தின்போது குருவின் கட்டளைகளை செய்தார்கள். அப்படி ஒரு நாள், காட்டுக்கு சென்று ஹோமத்துக்கு தேவையானதை எடுத்துவர சென்றார்கள். நடுவில் சாப்பிடவேண்டும் என்பதால், குரு இவர்களுக்கு அன்னம் கொடுத்து அனுப்பினார்.

வேலைகளை செய்து முடித்து , குசேலர் விரைவில் வந்துவிட்டார். கிருஷ்ணன் கொஞ்சம் தாமதமாக வரவே, பசி பொறுக்காத, குசேலன், கிருஷ்ணனுக்கு வைத்து இருந்ததையும் சேர்த்து சாபிட்டுவிட்டான்.

அடுத்தவனுக்கு கொடுத்துவிட்டு சாப்பிடவேண்டும் என்கிற விஷயம் கூட தெரியாமல் , தனது வயிறே பிரதானம் என்று நடந்துகொண்டதால், வாழ்க்கையில், இவனுக்கு சிரமம் வந்து, பல வருடங்கள் கழித்து கிருஷ்ணனை சந்திக்க செல்லும்போது ஒரு பிடி அவுலைஅவன் கொடுத்து தோஷத்தை போக்கிக்கொண்டு, பிறகு செல்வத்தை அடைந்தான். விதி வலியது இல்லையா.

அதனால்தான் வீட்டில் சமைத்ததை சாமிக்கு படைத்துவிட்டு சாப்பிடவேண்டும் என்று பெரியோர்கள் சொன்னார்கள்.

இன்று நாமெல்லாம் குசேலனாக இருக்க காரணம், நாம் நமது வீட்டில் சாமிக்கு தினமும் சமைப்பதை படைபதில்லை.

நீங்கள் என்ன சமைத்தாலும் சரி அதை தினமும் படைத்துவிட்டு பிறகு சாப்பிடவும்.

உங்கள் குழந்தைகளுக்கு வேலை கிடைக்காமல் சிரமப்பட்டால், இதுதான் காரணம். உணர்வீர்களாக.

Leave a comment