இனிமையாக வாழுங்கள்

அன்பர்களே நாம் பொதுவாக அனைவருமே சிலநினைப்புகளை நினைப்போம். அதாவது, நமக்கு மட்டும் ஏன் இப்படி கஷ்டம் வந்துகொண்டே இருக்கிறது.அப்படி என்ன நாம் பாவம் செய்தோம். இந்த ஜன்மத்தில் இன்று இந்த நிமிடம் வரை நான் யாருக்கும் துரோகம் செய்யவே இல்லையே என்று யோசிப்போம்.

இதுபோல்தான் செய்தவரும் ,செய்யாதவரும் ,,நினைத்துகொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் நினைப்பதர்க்கும், உங்கள் சிரமத்துக்கும், உங்கள் துக்கத்துக்கும், நீங்கள் இப்போது நடந்துகொள்ளும் விதத்திர்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதனை நன்கு புரிந்துகொள்ளவும்.

பரீட்சை எழுதினால் பாஸ் ஆனால் சிலபேர் fail. அவ்வளதுதானே. எப்போதுமே fail இல்லை .எப்போதுமே பாஸ் இல்லை. அன்று எழுதிய அந்த நேரத்தில்தான் இந்த ரிசல்ட் .

அதுபோல் நீங்கள் முன்செய்த வினைக்குத்தான் இப்போது பலனே, தவிர, உங்களுக்கு நல்லது நடக்கவே நடக்காது என்று யாருமே கூறிவிடமுடியாது . அது எந்த காலம் என்றுதான் தெரியாதே தவிர நல்ல காலம் வராது என யாராலும் சொல்லமுடியாது.

fail என்றால் திரும்ப எழுதி பாஸ் செய்வதுபோல , நமது சிரம காலத்தை, நம் நல் ஒழுக்கத்தினால் தகர்த்தி,எறிந்துவிட்டு, பிறகு சுக வாழ்க்கையை வாழ வேண்டும் அன்பர்களே.

கஷ்டகாலத்தில்தான் நாம் ஒழுக்கமாக இருக்கவேண்டும். அதுதான் நல்லகாலம் வருவதற்கு அடையாளம் ஆகும் அன்பர்களே.

ஆகவே இனி புலம்பாமல், இனிமையாக வாழுங்கள் அன்பர்களே.

வெற்றி உங்களின் பக்கத்திலேயே இருக்கிறது விரைவில்