உங்கள் செயல்களில் நீங்கள் வெற்றி பெற

உங்கள் செயல்களில் நீங்கள் வெற்றி பெற , கீழ்கண்ட திருப்புகழை தினமும் சொல்லி வாருங்கள்.நல்ல சூழ்நிலையை நீங்கள் உணர ஒரு வாய்ப்பு ஆகும்.

விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை
தரித்த வாடையு மணிப்பூணு மாகவெ
மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கிய – மயலூறி

மிகுத்த காமிய னெனப்பாரு ளோரெதிர்
நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுல
வெறுப்ப தாகியெ யுழைத்தேவி டாய்படு -கொடியேனைக்

கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காமலேயுனை
கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு -மொருவாழ்வே

கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக
ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ
கழற்கு லாகவெ சிறப்பான தாயருள் = தரவேணும்

மலைக்கு நாயக சிவகாமி தாயார்
திருக்கு மாரன முகத்தாறு தேசிக
வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ் தருவோனே

வசிஷ்டர் காசிபர் தவத்தான யோகியர்
அகத்ய மாமுனி யிடைக்காடர் கீரனும்
வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு -முருகோனே

நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொணாமலை தலத்தாரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் -வருவோனே

நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ
யடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி
நினைத்த காரிய மநுக்கூல மேபுரி – பெருமாளே

Leave a comment