எந்திரங்கள் என்பது

நீங்கள் கடைகளில் இருக்கும் எந்திரங்களை வாங்கி வீட்டிலோ, உங்கள் கடைகளிலோ அப்படியே வைத்தால் எந்த பிரயோசனமும் கிடையாது.

எந்திரம் என்பது ,கட்டங்கள், எழுத்துக்கள் என சூஷ்ம விளக்கங்களை கொண்டது ஆகும்.

ஒரு ஓவியம் பார்க்க, ரசிக்க, நன்றாக இருக்குமே தவிர,அது பேசுமா,பேசாது .இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. ஏனேன்றால் அதற்கு உயிர்,உடல் என்று தனியாக இல்லை. அது ஒரு ஓவியம் அவ்வளவுதான்.

அதுபோல்தான் அன்பர்களே, சும்மா அப்படியே வாங்கி வந்து வீட்டிலோ, கடைகளிலோ வைத்தால் உயிர் இல்லாமல் இருப்பதால் அது வேலை செய்யாது.

ஆகையால், எந்த எந்திரமோ, அது எந்த கடவுளின் எந்திரமோ, அதற்கு தகுந்தால்போல் அதற்கு, உயிர்கொடுத்து,அபிஷேகம், அர்ச்சனை, ஜபம் என ஒரு மண்டலமாவது செய்து, பிறகு நீங்கள் ஊதுபத்தி சாம்பிராணி காண்பித்து வந்தால் அது வேலை செய்யும்.

கணபதி எந்திரம்,முருகனுக்கு எந்திரம், அம்பாளுக்கு எந்திரம், ஐயனார் எந்திரம்,என, அனைத்து தெய்வத்துக்கும் எந்திரம் உண்டு.

இதற்கு தீட்டு ஆகாது.தீட்டு இருந்து நீங்கள் பூஜை செய்தாலும் பலிக்காது.தினமும் ஊதிபத்தி,சாம்பிராணி கான்பிக்கவில்லைஎன்றாலும் அது வேலை செய்யாது.

ஒரு எந்திரம் தயார் செய்ய அறுபது நாள் ஆகும். செலவு அதிகம். ஆகவே, குறைவாக கிடைக்கிறது என்று நீங்கள் வாங்கினால், அதனால் உங்களுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை. விற்ற எங்களுக்குத்தான் லாபம் . ஆகையால்தான் நான் எந்திரங்களை யாருக்கும் சொல்லுவதில்லை.

இதற்கு நீங்கள் தினமும் நெய்வேதியம் செய்யாமல் இருந்தால் அதுவே நமக்கு சிரமத்தை கொடுக்கும் என்பதால், முடிந்தவரைக்கும் எந்திரத்துக்கு ஆசைபடாதீர்கள்.

ஆசைபடுவதாக இருந்தால் ,செலவுக்கு தயங்காதீர்கள்.

பொதுநலம் கருதி இந்த பதிவு.