எனது நண்பரின் ஆராய்ச்சிக்குழு

நமது ஜனன ஜாதகங்களில் நவகிரகங்கள் ஒவ்வொரு இடத்திலும் தனியாக இருந்தால் தரும் பலன்கள்.
இதற்க்கு கிரக பார்வை,கிரக சேர்க்கை,ஆட்சி,உச்சம், நீசம்,நட்பு,பகை,வக்ரம்,அஸ்தமனம் போன்றவை பார்க்க தேவையில்லை.கிரகங்கள் தனித்து இருப்பதே முக்கியம்.
குறிப்பு: இப்பலன்களை பல ஜாதகங்களை ஆராய்ந்து பின் பலனாக சொல்லவும்.இதில் கூறப்பட்ட பலன்கள் என் அனுபவத்தில் 70 % வரை சரியாக வருகிறது எனவே இதை பயன்படுத்துவர்கள் தங்களின் அனுபவத்தில் சரியென்பதை மட்டுமே எடுத்துக் கொள்ள.

 

சூரியன்
முதல் ஸ்தானம்:15வயதில் கஷ்டம் உண்டு
இரண்டாம் ஸ்தானம்:25 ம் வயதில் அரசு பகையோ,பிரச்சனையோ எற்ப்படும்.
மூன்றாம் ஸ்தானம்:12வயதுவரை குடும்பத்தில் பலமுறை பிரச்சனைகள் ஏற்படும்,20 வயதுக்கு மேல் யோகம் ஏற்படும்.
நான்காம் ஸ்தானம்:14 வயதில் தாய்,தந்தைக்கு பிரச்சனைகளும் பாதிப்பும் ஏற்படும்,32 வயதுக்கு மேல் யோகம் உண்டு.
ஐந்தாம் ஸ்தானம்:5 வயது வரை பெற்றோருக்கு யோகம் குறைவு.
ஆறாம் ஸ்தானம்: 23 வயதுக்கு மேல் வசதிகளும் செல்வ சுகங்களும் ஏற்படும்.
ஏழாம் ஸ்தானம்:27 வது வயதில் தூர தேசயாத்திரை ஏற்படும்.
எட்டாம் ஸ்தானம்:27 வயதில் மனைவிக்கு பாதிப்பு உண்டு (திருமணம் ஆனவர்களுக்கு) .
ஒன்பதாம் ஸ்தானம்:பெரியோர்களின் ஆதரவு அனைத்து வயதிலும் உண்டு.
பத்தாம் ஸ்தானம்:12வயதுக்கு மேல் கல்வி தேர்ச்சி,புகழ், பெருமை ஏற்படும்.
பதினொன்னாம் ஸ்தானம்: 25 ஆம் வயதில் ஆடம்பர பொருட்களும்,வண்டி வாகன வசதிகளும் ஏற்படும்.
பனிரெண்டாம் ஸ்தானம்:
36,38 வயதுகளில் நோய் பாதிப்புகளும்,அவமதிப்புகளும் ஏற்படும்.

 

சந்திரன்
பிரதமை ஸ்தானம்: 11,29 வயதுகளில் நோய்கள் தோன்றி மறையும்.

துதியை ஸ்தானம்: 18 வயதில் யோகமும், அதிஷ்டமும் உண்டு,27 வது வயதில் பல வித சிரமங்கள் ஏற்படும்

திருதியை ஸ்தானம்:20 வயதுக்கு மேல் சகல ஆரம்பர வாழ்வு ஏற்படும்

சதுர்த்த ஸ்தானம்: 27 வயதில் அன்னையின் சொத்து கிடைக்கும்.

பஞ்சம ஸ்தானம்: திடீர் யோகம் ஏற்படும்.

சஷ்டிய ஸ்தானம்: 36 ம் வயதில் அன்னிய ஸ்திரி போகமும்,57 வது வயதில் பதவி கெடுதலும், கண்டமும் ஏற்படும்.

சப்தம ஸ்தானம் : 15 வது வயதில் தாய்க்கு தோஸம்.

அஷ்டம ஸ்தானம்: 12 வயதில் ஜல கண்டமும், கஷ்டமும் ஏற்படும்.

நவம ஸ்தானம்: 20 வது வயதில் தல யாத்திரை (தரிசனம்) ஏற்படும்.

தசம ஸ்தானம்:27 வயதில் ஸ்திரி யோகமும்,நீச்ச இனத்தாரால் பகையும் ஏற்படும்.

ஏகாதசி ஸ்தானம்: 20 வது வயதில் அரசு வெகுமதி,பதவி லாபம் ஏற்படும்.

த்வாதாசி ஸ்தானம்: 3 வது வயதில் நோய்களும்கஷ்டங்களும் ஏற்படும்.

 

செவ்வாய்

உதய ஸ்தானம்: பிறப்பு முதல் ஐந்து வயதுக்குள் காயங்களால் தழும்புகள் ஏற்படும்.

குடும்ப ஸ்தானம்:12 வது வயதில் பெருமளவு தன நஷ்டங்களும்,பிரச்சனைகளும் ஏற்படும்.

சகோதர ஸ்தானம்: 13 வது வயதில் தனது உறவினர்களுக்கு பலவித நன்மைகள் ஏற்படும்.

சுக ஸ்தானம்: 6 வயது வரை பெற்றோருக்கு முன்னேற்றம் தடைப்படும்

பூர்வ புண்ணிய ஸ்தானம்: ஐந்து வயது வரை உறவினர்களுக்கு பாதிப்பு உண்டு.

ரோக ஸ்தானம்: தாய் வழி உறவினர்களுக்கு கஷ்டம் ஏற்படும்.

களஸ்திர ஸ்தானம்: 27 வது வயதில் மனைவிக்கு பாதிப்பு உண்டு.

ஆயுள் ஸ்தானம்: 35 வயதில் கண்டங்கள் உடையவர்.

பிதுர் ஸ்தானம்: 14 வது வயதில் தந்தைக்கு நோய்கள் ஏற்படும்.

ஜீவன ஸ்தானம்: 18 வது வயதில் முன்னேற்றமும்,27 வது வயதில் ஆயுதத்தால் காயமும் ஏற்படும்.

லாப ஸ்தானம்: 45 வது வயதில் செல்வ சேர்க்கையும்,திடீர் யோகமும் ஏற்படும்.

விரய ஸ்தானம்: 25 வது வயதில் பெரும் பிரச்சனை ஏற்படும்.

 

புதன்

முதல் வீடு :ஐந்து வயது வரை சுறுசறுப்பும்,குறும்பு தனமும் இருக்கும்.

இரண்டாம் வீடு: 12 வயது வரை கல்வி சிறப்பு பெறும்.

மூன்றாம் வீடு: 12 வது வயதில் பொன்,பொருள் நஷ்டம் ஏற்படும்.

நான்காம் வீடு:16 வது வயதில் தன லாபமும்,22 வது வயதில் தன விரயமும் ஏற்படும்.

ஐந்தாம் வீடு :26 வயதில் சந்ததி ஏற்படும் .

ஆறாம் வீடு:21 ம் வயதில் உறவினர்களால் தொல்லை ஏற்படும்.

ஏழாம் வீடு:17 வது வயதில் பெண்களால் லாபமும்,24 வது வயதில் அதிக யோகமும் எற்படும்.

எட்டாம் வீடு: 14 வது வயதில் பொருள் விரயமும்,24 வது வயதில் காரிய சித்தியும் ஏற்படும்.

ஒன்பதாம் வீடு: 19 ஆம் வயதில் அன்னைக்கு பாதிப்பு உண்டு.

பத்தாம் வீடு: 30 வயதுக்கு மேல் வியபாரம் சிறக்கும்.

பதினொராம் வீடு: 6 வயதுக்கு மேல் குடும்ப சுகமும்,45 வயதுக்கு மேல் திடீர் லாபமும் ஏற்படும்.

பனிரெண்டாம் வீடு: 18 வயதில் மறைமுக எதிரிகளை உண்டு பண்னும்.

 

குரு

உயிர் ஸ்தானம் : 5 வயதிலும்,16 வயதிலும் செல்வ சேர்க்கையும்,திடீர் யோகமும் ஏற்படும்.

வாக்கு ஸ்தானம்:16,27,39 ஆகிய வயதுகளில் செல்வ சேர்க்கையும்,செல்வாக்கும், சொல்வாக்கும் ஏற்படும்.

தைரிய ஸ்தானம்: 20 வது வயதில் பெரியோர்கள் ஆதரவும் (சந்திப்பும்) ,38 வது வயதில் தல யாத்திரையும் ஏற்படும்.

கிருதய ஸ்தானம்: 12 வது வயதுகளில் உறவினர்களால் செல்வம் சேரும்.

புத்தி ஸ்தானம்: 18 வயதுக்கு மேல் பூர்வீக சொத்தை விருத்தி செய்வார்கள்.

காய ஸ்தானம்: 40 வயதில் எதிரிகளால் பிரச்சனை உண்டு.

காம ஸ்தானம்: 27 வயது,34 வயது போகம்,யோகம் ஏற்படும்.

மர்ம ஸ்தானம்: 17 வது வயதில் பரஸ்திரி நேசம் ஏற்படும்,31 வயதில் நோய் பாதிப்பு உண்டு.

பக்தி ஸ்தானம்: 15 வயது முதல் தந்தைக்கு யோகம்,
35 வயதில் சாதனை புரிவார்கள்.

அந்தஸ்து ஸ்தானம்: 16 வது வயதில் பெருமளவு செல்வம் சேரும்.

மூத்த சகோதர ஸ்தானம்: 32 வது வயதில் உயர்ந்த வாகன சேர்க்கை உண்டு.

மோட்ச ஸ்தானம்: 25 வயதில் திடீர் விரயங்கள் ஏற்படும்.

 

சுக்கிரன்

தனு ஸ்தானம்: 17 வயதில் ஸ்திரி மூலம் யோகம்.

தன ஸ்தானம்: 32 வயதில் பெண்களால் முன்னேற்றம்.

போஜன ஸ்தானம்: 6வது வயதில் குடும்பத்துடன் தல யாத்திரை ஏற்படும்.

மாதுரு ஸ்தானம்: 30 வயதில் நவீன வாகன வசதி ஏற்படும்.

புத்திர ஸ்தானம்: 15 வயதில் திடீர் போகம் (யோகம் அல்ல) உண்டாகும்.

கலக ஸ்தானம்: 41 வது வயதில் ஆயுத பயம்,அறுவை சிகிச்சை ஏற்படும்.

சிற்றின்ப ஸ்தானம்: 24 வயதில் மனைவி மூலம் செல்வம் சேரும்.

யுத்த ஸ்தானம்: 4 வது வயதில் அன்னைக்கு கண்டம்,10 வது வயதில் யோகம் எற்படும்.

தரும ஸ்தானம்: 15 வது வயதில் செல்வ விருத்தி ஏற்படும்.

கரும ஸ்தானம்: 20 வயதில் யோகமும் ,தொழில் மேன்மையும் ஏற்படும்.

இளைய மனைவி ஸ்தானம்: 18 வது வயதில் திடீரென வசதி வாய்ப்புகள் கூடும்.

அயன சயன ஸ்தானம்: 36 வயதில் செல்வ சேர்க்கை உண்டு.

 

சனி

சிரசு ஸ்தானம்: 5 வது வயதில் உடல் நல பாதிப்பு ஏற்படும்.

வலக்கண் ஸ்தானம்: 12 வயதில் தன சேதம் உண்டு.

வெற்றி ஸ்தானம் : 13 வயதுக்கு மேல் உறவினர் மேன்மை அபரிதமாக இருக்கும்.

வித்தை ஸ்தானம்:எட்டாவது வயதில் பற்று,துவேசம்,நஷ்டம்,ஏற்பட்டு ,உறவினர்கள் உதவி கிடைக்காது.

மனக்கூர்மை ஸ்தானம்:
ஆறு வயதில் உறவினர்களுக்கு தோசம் காட்டும் .

பகைவர் ஸ்தானம் :இருபத்தி நான்கு வயதில் பெரும் யோகம் உண்டு.

மனைவி ஸ்தானம் :பதினெட்டு வயதில் கலப்பு மணம்,அல்லது தனது இஷ்ட திருமணமாக அமையும்.

பாவ ஸ்தானம்:எட்டு, இருபத்தியெட்டு பொன்ற வயதுகளில் கண்டங்கள் உண்டு.

இஷ்ட தெய்வ ஸ்தானம் :
பதிநான்கு வயதில் தந்தைக்கு கண்டம் உண்டு.

ராஜாதிக்க ஸ்தானம் :இருபத்தியேழுவயதில் காயம்,தழும்பு ,இருபத்தியந்து வயதில் தெய்வானுகூலமும் ஏற்படும்.

தெளிந்த அறிவு ஸ்தானம் :நாற்பத்து ஐந்து வயதில் பெருமளவு தன லாபங்கள் ஏற்படும்.

மறுமைபேறு ஸ்தானம் :25 வயதில் உஷ்ண நோய் ஏற்படும்.

 

ராகு,கேது

1) 5 வயதில் பாதிப்பு.
2) 12 வயதில் பொருள் நஷ்டம்.
3)13 வயதுக்கு மேல் உறவினர் மேன்மை.
4) 8வயதில் இனத்தார் பாதிப்பு.
5) 5 வயதில் உறவினர் பாதிப்பு.
6) 24 வயதில் பலவித லாபம் உண்டு
7)27 வயதில் மனைவிக்கு பாதிப்பு
8)28 வயதில் கண்டம் உண்டு.
9)14 வயதில் தந்தைக்கு பாதிப்பு உண்டு
10)சிறு வயதில் உடல் நல பாதிப்பு வந்து தீரும்.
11)45 வயதில் யோகம் உண்டு.
12)25 வயதில் பல கஷ்ட நஷ்டம் உண்டு.

நன்றி நண்பர்களே