கஜேந்திரன் கதை உரைக்கும் தத்துவங்கள்

கஜேந்திர மோட்சம் கதை சொல்கிற தத்துவம் என்ன??

நாம் அதைத்தான் அறிந்துணர வேண்டும்!!! யானை என்பது ஜீவாத்மா!! ஆதிமூலம் என்பது பரம்பொருள்!! முதலை என்பது உலக வாழ்வு !!! நீரானது உலக ஆசைகள் !!!

நீருக்குள் இறங்கும்முன்னால் நிலத்தில் நிற்கும் யானை ஜீவாத்மாவின் முதல் பிறவி !!! பல்லாயிரம் ஆண்டுகள் என்பது பல்லாயிரம் மனிதப் பிறவிகள் !!!!! ஜீவாத்மாவாக இருக்கிற யானை உலக வாழ்வு என்கிற முதலையிடம் மாட்டிக் கொண்டது!!! அது ஒவ்வொரு பிறவியிலும் உலக வாழ்விலிருந்து விடுபடும் முயற்சியில் ஈடுபடும்போதெல்லாம் அதே உலக வாழ்வால் இறுகப் பற்றப்பட்டுக் கிடந்தது !!

உலகவாழ்வு அசுரபலத்துடன் ஜீவாத்மாவைப் பற்றியிருந்தது!! அவ்வாறான அசுரபலம் உலகவாழ்வுக்குக் கிடைக்கக் காரணம் அது ஆசைகள் என்கிற நீருக்குள் அமிழ்ந்திருந்த காரணத்தால்தான்!!! அந்த ஆசைகளின் மூலம் கிடைத்த அசுரபலத்தின் மூலமாகத்தான் உலக வாழ்வு ஜீவாத்மாவை ஒவ்வொரு பிறவியிலும் விடாமல் பற்றிக் கிடந்தது!!! அதே போல ஜீவாத்மாவும் ஆசைகள் என்னும் நீருக்குள் மாட்டியிருந்த காரணத்தால்தான் உலக வாழ்விலிருந்து விடுபட முடியாமல் இருந்தது!!!

யானை நீருக்குள் இறங்குமுன் தரையில் இருந்ததல்லவா??? அதுதான் ஜீவாத்மாவின் முதல் பிறவி!! அது உலகவாழ்வின் ஆசைகள் என்கிற நீரில் இறங்கிய காரணத்தால் அதனால் பலப்பல பிறவிகள் உலக வாழ்வில் இருந்து விடுபட முடியாமல் போனது !!!! இப்படி ஆசைகளால் உலக வாழ்வுக்குள் மாட்டிக் கொண்டு அவதிப்படும் ஜீவாத்மா ஏதேனும் ஒரு பிறவியில் தாங்கவொண்ணாத் துன்பத்தால் அவதிப்பட்டு பரமாத்மாவை நினைத்து அதைத் தன்னை விடுவிக்க வேண்டி அழைத்துக் கதறுகிறது!! அந்த நேரம் பரமாத்மா உடன் வந்து அந்த ஜீவாத்மாவைப் பற்றியுள்ள உலக வாழ்வை அழித்து அந்த ஜீவத்மாவைத் தன்னுடன் இணைத்துக் கொள்கிறது!!! இதையே இந்தக் கதையின் தத்துவமாகக் கூற விழைகிறேன்!!

Leave a comment