கஜேந்திர மோக்ஷம்

ஹே குருவாயூரப்பா,

திரிகூடமலை பர்வதத்தில், ருதுமது ருதுமது என்கிற தடாகத்தில் , கஜேந்திரன் என்ற யானை தினமும் உன்னை பூஜை செய்ததாமே.விதி வசத்தால் ஒரு நாள், முதலை யானையின் காலை பிடித்துவிட்டதாமே. பல நாட்கள் யானை தன் பலத்தால் முயன்று பலன் இல்லாமல்,முன் ஜன்ம வாசனையால் ,இந்த ஜன்மத்தில் யானை உன்னை தினமும் பூஜை செய்ததால், நீ ஞாபகப்படுத்த,அந்த கஜேந்திரன் என்ற யானை, உன்னை , ஆதிமூலமே என்று கதறியபோது, ஹரி என்கிற அவதாரமாக நீ உடன் கருடாழ்வாருடன் பறந்து வந்து ரக்ஷ்த்தியாமே.அப்பேற்பட்ட கிருஷ்ணா,என்னையும் நீ அதுபோல் காப்பாத்த வேண்டும்.

மேலே சொன்னபடி நீங்கள் தினமும் காலை மூன்று முதல் நான்கு மணிக்குள், விளக்கு ஏத்தி , குருவாயூரப்பன் படத்துக்கு முன்னாள் சொல்லிவந்தீர்கலானால், உங்களுக்கு கை மேல் பலன் உண்டு. இதை கிருஷ்ணனே ஒப்புக்கொண்ட விஷயம் ஆகும் அன்பர்களே.

இனி கஷ்டம், பரிகாரம் செய்ய காசு இல்லை.என்று எல்லாம் சொல்லகூடாது.

இதை கூட நீங்கள் செய்யமுடியவில்லை என்றால், பிறகு எதைத்தான் நீங்கள் செய்யபோகிறீர்கள்.