கடமையைச் செய்வோம்

நான் அடுத்தவருக்காக உழைக்கிறேன். எனக்கு ஒன்றும் பலன் இல்லை என்று புலம்புபவர்களா நீங்கள்.அப்படியென்றால், முதலில் படியுங்கள் இதை

மூன்றுவிதமாக இதை நாம் சிந்திக்கவேண்டும்.

முதலில்:=

காய்க்கின்ற மரம்தான் கல்லடி படும். காய்க்காமல் இருந்தால்,அது வேருடன் சாயும், அடுப்பு விறகுக்கு

அப்படி காய்க்கின்ற படியாலேயே , பூ வருகிறது, காய்க்கிறது, பிறகு அது பழுத்து பழமாக இருக்கிறது.

இதை பறித்து அடுத்தவர்கள் பசி ஆருகிரார்கள்.மரத்துக்கு லாபம் என்ன.மரம் தனது தர்மத்தை மட்டுமே செய்கிறது .பிரதி பலன் எதிர்பார்பதில்லை. ரொம்ப நாள் இது பூமியில் ஜீவிக்கிறது. பட்ட பரமாக இருந்தால் அப்படியே விட்டுவிடுவார்களா, உடன் வெட்டி சாய்த்துவிடுவார்கள்.

நீங்கள் இப்படி புலம்பினாள், நீங்கள் உங்களை அடுத்தவர் பாராட்டவேண்டும் என்கிற எண்ணத்தில்தான் செய்கிறீர்கள் என்று அர்த்தம் ஆகும்.

பாராட்டை எதிர்பார்க்காமல் இருந்தீர்களே ஆனால், அதன் பலன் உங்களுக்கு தனியாகவே தெரியும். அன்றேநீங்கள் பாராட்டப்பட்டுவிட்டீர்களே ஆனால், உங்களுக்கு பெரிய பலன் பிறகு இல்லை.

நீங்கள் பாராட்டப்படாமலேயே இருந்தால்தான் உங்களுக்கு முழுபலன். வேதம் சொல்கிறது இதைத்தான்.

சூரியனும் சந்திரனும், காத்தும், நீரும்,ஆகாயமும் எதை எதிர்பார்கிறது. மனிதனை தவிர/ என்று சொல்லுகிறது.

பூமி எதை எதிர்பார்கிறது.அனைத்து விளைச்சல்களும் தருகிறது.கட்டிடங்களை தாங்கிக்கொண்டு இருக்கிறது.

அதன்படியே நாமும் இறைவனால் படைக்கப்பட்டு, இறைவன் இட்ட வேலையை செய்கிறோம் என்று நீங்கள் உணர்ந்தீர்களே ஆனால், நீங்கள் தான் இந்த பூமியை ஆளப் பிறந்தவர்கள் என்பதனை மறக்கவேண்டாம் அன்பர்களே.

பிரதி பலன் என்பது ஒரு வியாபாரத்தைபோல். எப்படி லாபமோ அப்படியே நஷ்டமும் கண்டிப்பாக உண்டு.

இங்கே கடவுள் சொல்வது, பிரதிபலன் இல்லாமல் உழைப்பது என்பது ,முழுக்க முழுக்க புண்ணியமே ஆகும் என்பதனை மறவாதீர்கள்.

வேலைக்கு சென்று சம்பளம் வாங்குவது வேறு. இங்கே நான் சொல்லும் உழைப்பு வேறு உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.