கலியில் சுகமாய் வாழ ஒரு மந்திரம்

துவாபர யுகம் முடிவில் அதாவது கிருஷ்ணா அவதாரம் முடியும் சமயத்தில் ,நாரதர் ,படைப்பின் தலைவன் பிரும்மாவை கேட்டார்.

கலியுகத்திலே,கலியை கடப்பது மிகவும் கடினம் என்பதால்,பிரும்மஹத்தி தோஷம்,தங்கத்தை திருடிய தோஷம் ,தேவர்கள்,மூதாதையர்கள் இவர்களை குறை சொல்வதால் வரும் சிரமங்கள்,தர்மத்தை நாம் விடுதல்,
இதற்க்கெல்லாம் என்ன செய்தால் இவைகள் தீரும் என்று கேள்வி கேட்டார்/

இதற்க்கு பிரும்மா , கீழ்கண்ட மந்திரத்தை ஒவ்வொருநாளும் ,சதா எவன் இதை மனனம் செய்து சொல்லிக்கொண்டே இருப்பானோ , அவனுக்கும் மேல்சொன்ன பாவம் அகலும்.

அதாவது இவர் சொன்னது உங்களது வாழ்க்கையில் மூன்று கோடி தடவை சொல்லவேண்டும் என்றார்.

104 வது உபநிஷத்தில் சொல்லியுள்ளது.இதைத்தான், சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னாள், ஸ்ரீ சைதன்ய மகா பிரபு சொன்னார்.

இதைதான் இஸ்க்கான்( isckon)இப்போது பரப்பி வருகிறது.

‘ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரேஹரே .,
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரேஹரே ‘

எல்லாமே வேதத்தில் கொடுத்துள்ளதை, நாம்தான் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம் அன்பர்களே.