காலையில் உங்கள் வீட்டில் விளக்கு ஏற்றும்போது இதை சொல்லி வரவும்.

நாத விந்துக லாதீ நமோ நம
வேத மந்த்ர சொரூபா நமோநம
ஞான பண்டித சாமீ நமோநம – வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம – பரசூரர்

சேத தந்தவி நோதா நமோநம
கீதா கிண்கிணி பாதா நமநம
தீர சம்ப்ரம வீரா நமோநம -கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம -அருள்தாராய்

ஈத லும்பல கோளால பூஜையும்
ஓத லுங்குண ஆச்சார நீதியும்
ஈர முங்குரு சீர்பாத சேவையு -மறவாத

ஏழ்த லம்புகழ் காவேரி யால்விளை
சோழ மண்டல மீதேம நோகர
ராஜ கெம்பிர நாடாளு நாயக – வயலூரா

ஆத ரம்பயி லாரூரர் தோழமை
சேர்த்தல் கொண்டவ ரோடேமு னாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மாகயி -லையிலேகி

ஆதி யந்தவு லாவாசு பாடிய
சேரர் கொங்குவை காவூர்ந னாடதில்
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் -பெருமாளே

Leave a comment