கால கணக்கு

நமது முனிவர்கள் சொல்கிறார்கள். இதை படித்துவிட்டு, நீ கஷ்டபடுகிறாயா, சுகப்படுகிறாயா, என்று நீயே தீர்மானித்துக்கொள் என்கிறார்கள், நமது முன்னோர்கள்.

க்ருத யுகம்,த்ரேதா யுகம்,துவாபர யுகம்,கலியுகம் மொத்தம் = 45,00,000 years.இதன் breakup போன பதிவில் சொல்லிவிட்டேன்.
இதற்க்கு ஒரு சதுர் யுகம் என்று பெயர்.
ஆகையால், 45,00,000 x 72 = 3,240 lakhs years = 1 மன்வந்தரம் . மொத்தம் 14 மன்வந்தரம் ஆகையால்
3,240 lakhs x 14 =45,360 lakhs of years .

1 கல்பம் அதாவது மொத்தம் 7 கல்பம். ஆகையால், 1 கல்பம் = 45,360 lakhs x 7 = 3,17,520 lakhs of years
இது இப்போ இந்த பூமிக்கு incharge ஆக உள்ள பிரும்மாவின் வாழ்நாளில் அரை நாள் ஆகும். ஆகையால்
இதை இரண்டு மடங்கு ஆக்கினால், பிரும்மாவின் இரவு பொழுது . சுமார் 6,35,040 lakhs of years.

இது பிரும்மாவின் ஆயுசில் ஒரு நாள் ஆகும்./ பிரும்மாவிற்கு இப்போ வயது 51 .அவருக்கு மொத்தம் வயது 100 வருஷம் ஆகும் .
ஆகையால், இந்த வருடத்தை 365 days x 6,35,040 lakhs of years = one year again x 50 = end of earth.
திரும்ப உலகம் உற்பத்தி யாரால் – கிருஷ்ணனால்.

பிரும்மாவிற்கு மறுபடி பதவி கிடையாது ஒரு தடவைதான். அடுத்த பிரும்மா யார் தெரியுமா அன்பர்களே.

சாக்ஷாத் நமது சொல்லின் செல்வன், வாயு குமாரன், ராம தூதன், அதாவது நமது ஆஞ்சநேயர்தான் .
அதனால்தான் அவருக்கு இத்தனை கூட்டம் வருகிறது. சுந்தரகாண்ட நாயகன்.
அமெரிக்க,ஆஸ்திரேலியா,ஐரோப்பா,ஆசியா,ஆப்பிரிக்கா, இவை சேர்ந்தது நமது பூமி – கீழே 7 லோகம் மேலே 7 லோகம் அனைத்துக்கும் பிரும்மாதான் பொறுப்பு ,

இதுபோல் ஆயிரக்கணக்கான அண்டங்களை நமது கிருஷ்ணன் வைத்து இருக்கிறான்.

நாம் எதோ 5 அடியில் பிறந்து, ஏதோ ஒரு தலைநகரிலே ,எதோ ஒரு மாவட்டத்திலே, எதோ ஒரு மானகராட்சியிலே, எதோ ஒரு ஏரியாவிலே , எதோ ஒரு தெருவிலே, ஏதோ ஒரு வீட்டிலே, எதோ ஒரு ரூமிலே , அந்த ரூமிலேயும் எதோ ஒரு மூலையிலே 5 அடியில் உட்கார்ந்துகொண்டு , நாமெல்லாம், நமக்கு எல்லாமே தெரிந்தால்போல் , கடவுள் இல்லை, சாஸ்திரம் பொய் என்று சொல்கிறோமே, என்ன விந்தை சார் .
உங்களுக்கு என்ன கஷ்டம் இப்போ சொல்லுங்கள் . நாம் வாழ்வது 70 வருடம். அதுவும் நமது கணக்கில். பிரும்மாவின் கணக்கில் உங்கள் வாழ்நாள் எவ்வளவு என்று நீங்களே முடிந்தால் பார்த்துக்கொள்ளுங்கள் .
நீங்கள் என்ன கொண்டுவந்தீர்கள்,என்ன உங்களுடையது நஷ்டம் ஆகிவிட்டது .என்ன கொண்டுபோகப்போகிரீர்கள். ஏன் இந்த துக்கம்,பொறாமை,காழ்ப்புணர்ச்சி .

சிந்திப்பீர். நலமாக வாழ்வீர் / ஆண்டவன் துணை இருக்கான் கவலை இல்லை.
குறிப்பு. இவ்வளவு காலத்தை எப்படி புரிந்துகொள்வது/ ரொம்பவும் ஈசி.
டிஜிட்டல் கடிகாரத்தை பாருங்கள். மணி –நிமிடம்-வினாடி காண்பிக்கும். வினாடி வேகமாக ஓடும்.பிறகு அதைவிட மெதுவாக, நிமிடம் மாறும். பிறகு அதைவிட மணி இன்னும் மெதுவாக மாறும்.

இதுபோல்தான், நாம் வாழும் பகுதி பூமி, வினாடி மாதிரி நமது வாழ்க்கை. மணி முள் மாதிரி பிரும்மாவின் நிலைமை.

இப்போ உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன் அன்பர்களே. நன்றி.சந்தோஷமாக இருங்கள்.
யாராவது உங்களிடம் கஷ்டம் என்றால், இதை அவரை விட்டு படிக்கசொல்லுங்கள்