கிருஷ்ணரும் தாய் மாமனும்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தால் மாமாவிற்கு ஆகாது என்று நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

அன்பர்களே,அர்த்தம் தெரியாமல், இவர்களாகவே கற்பனையில் இருந்து அனைவரையும் குழப்பி, நிம்மதி இல்லாமல் செய்துவிடுகிறார்கள்.

தாய் மாமனுக்கு ஆகாது என்றுதான் நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லவா.

இது முற்றிலும் தவறாகும். எப்படி என்று நீங்களே பாருங்கள்.

பகவான் கிருஷ்ணன் ரோகிணி நட்சத்திரத்தில் அவதாரம் செய்தான். பிறகு தனது பத்து வயதில் தனது மாமனை கொன்றான், என்பதால், தாய் மாமாவிற்கு ஆகாது என்று சொல்லி பழக்கிவிட்டார்கள். காலப்போக்கில் இதன் அர்த்தம் சரியாக பரப்பப்படவில்லை அன்பர்களே.

இதோ கவனியுங்கள்.

வியாசரே ஸ்ரீமத் பாகவதத்தில் ரொம்பவும் மிகவும் தெளிவாக சொல்லி இருக்கிறார். அதாவது, கம்சன் , பகவான் கிருஷ்ணருக்கு, தாய் மாமாவே இல்லை .

பிறகு என்ன என்றால், கம்சன், கிருஷ்ணருக்கு ஒன்றுவிட்ட தாய் மாமாவாகும். அதாவது, தேவகியும், கம்சனும் ,கூடப்பிறந்த சகோதர சகோதரி இல்லை.ஒன்றுவிட்ட சகோதர சகோதரிகள் ஆவார்கள்.

அதனால், தாய் மாமாவிர்க்கு ஆகாது என்பது இங்கு அர்த்தமில்லாமல் போய்விட்டது.

மேலும், கம்சன் மிகவும் கொடியவன் ஆவான். அதுபோல் , உங்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைக்கு ,தாய் மாமாவாக யார் இருக்கிறாரோ அவன் அயோக்கியனா . இல்லையே. பிறகு ஏன் பயப்படவேண்டும்.

ஆகவே அன்பர்களே, இதை நீங்கள் உங்கள் சொந்த பந்தங்களுக்கு விரிவாக எடுத்து சொல்லி, இனி குழம்பாமல் நன்றாக வாழுங்கள் அன்பர்களே.

Leave a comment