குரு-கரு -குருபலன்

மக்களுக்கான விழிப்புணர்வு பதிவு:

பொதுவாக குருபலன் வந்துவிட்டால் திருமணம் கைகூடும் என்ற கருத்து சமூகத்தில் நிலவி வருகிறது.குரு 2,5,7,9,11-ம் இடங்களில் வரும் போது குரு பலன் என்று சொல்லப்படுகிறது.உண்மைதான். ஆனால் குரு என்பவர் புத்திர காரகன் மட்டுமே.திருமண காரகன் இல்லை.

திருமணம் நடப்பதற்கு குருபலன் மட்டுமே காரணம் இல்லை.அப்படிப் பார்த்தால் ஒருவருடம் விட்டு ஒருவருடம் குருபலன் வந்து கொண்டுதான் இருக்கும். 25 வயதில் தொடங்கி 35 வயது வரை வரன் பார்த்தும் திருமணம் ஆகாத எத்தனையோ நபர்கள் இருக்கிறார்கள்.அவர்களுக்கு குறைந்தது 5 முறையாவது குருபலன் வந்திருக்கும்.ஏன் திருமணம் நடைபெறவில்லை.அது போல் குருபலன் இல்லாத எத்தனையோ பேருக்கு திருமணம் நடந்திருக்கிறது. எனவே குரு என்பவர் கருவிற்கு காரணமாகிறார்.திருமணத்திற்கு இவருடைய பலன் வர வேண்டும் என்பது தவறான கருத்தாகும்.

திருமண காரகன் சுக்கிரன் தான்.ஜனன ஜாதகத்தில் 2,7ம் இடங்கள் அதன் அதிபதிகள் ,சுக்கிரன் ,செவ்வாய் இவர்கள் பெற்ற வலிமையின் அடிப்படையிலேதான் திருமண காலம் அமையும்.

யாருக்கு குருபலன் இருக்கும் போது திருமணம் செய்ய வேண்டும்?

ஜனன ஜாதகத்தில் குரு,5-ம் இடம், 3-ம் இடம் மற்றும் அதிபதிகள் வலிமை இழந்தவர்களுக்குத்தான் குரு பலன் இருக்கும் போது திருமணம் செய்ய வேண்டும்.ஆனால் ஆண் பெண் இருவர் ஜாதகத்திலும் இந்த அமைப்பு இருந்தால் குருபலன் வந்தாலும் குழந்தை கிடைக்காமல் போகும்.

குரு பலன் வந்தால் திருமணம் நடக்கும் என்று மக்களிடையே இன்று பரவிக் கிடக்கும் இந்தக் கருத்து அறியாமையே!