குரு பலன்:- நீங்கள் அதிகம் கேட்ட சொல்லாகத்தான் இது இருக்கும். நாம் எல்லோரும், சில விஷயத்தை,தப்பாக சொன்ன ஒன்றை, திரும்ப திரும்ப பல தடவை சொல்லி சொல்லி, right ஆக மாற்றி விடுகிறோம். அவைகளில், இதுவும் ஒன்று.
குரு பலன் என்பது, எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் திருமணத்திற்காக என்று. இது மிகவும் தவறு. இதற்கும், திருமணத்துக்கும் எந்த சம்பந்தமும், தனிப்பட்ட முறையில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை ஆகும். எப்படி.நன்றாக கவனிக்கவும்.குரு ,கோட்சார ரீதியாக,2,5,7,9,11 என்று வந்தால் பொதுவாக குரு பலன் என்பார்கள். அப்போது, குருபலன்தான் , முக்கியமானது என்றால், ஏன் குரு பெயர்ச்சி ஆகி, மேல்படி இடங்களில் வரும்போது நடப்பதில்லை.
ஒவோருதடவையும் குருபெயர்ச்சி மேல் சொன்னபடி வந்துகொண்டுதான் இருக்கிறது அல்லவா. ஆகா குரு பெயர்ச்சி என்பதும் ஒரு காரணமே தவிர, அது மட்டும் போதாது. மேலும் குருபலன் இருந்தால்தான், படிப்பு, வேலை, தொழில், வீடு கட்டுதல், இடம் வாங்குதல், விற்றல், வியாதி குணமாகுதல்,,இப்படி சொல்லிக்கொண்டேபோகலாம் .அத்துடன் சிலபேருக்கு மரண அவஸ்தை என்று கேள்விப்படிருப்பீர்கள் அல்லவா. ஆம் நண்பர்களே, அதற்க்கும் குருபலன் தேவைதான்.