சந்திர+ராகு சேர்க்கை பார்போம்:

1ல் லக்கினத்தில் இருப்பது நல்லதல்ல! ஜாதகனுக்கு நோய்கள் ஏற்பட்டு, அதனால் ஜாதகனின் மனதும் பாதிக்கப்படும்.

2ல் ஜாதகனின் குடும்ப வாழ்க்கையில் தீராத பிரச்சினைகள் உண்டாகும். கணவன் மனைவி இருவருக்குமே மனம் பாதிக்கப்படும். இருவரில் ஒருவர் உயிரை மாய்த்துக் கொள்ளும் மன நிலைமைக்குத் தள்ளப்படுவார்கள்.

3ல் ஜாதகர் சிற்றின்பங்களில் அதிக நாட்டமுடையவராக இருப்பார். சிற்றின்பம் என்னவென்று சரியாகத் தெரியாதவர்கள் பதிவை விட்டு விலகவும். ஜாதகரை ‘அந்த’ விஷயத்தில் திருப்தி செய்வது மிகக் கடினம். புதிது புதிதாக அவருக்கு வேண்டும். சிலர் ‘அந்த’ நாட்டத்தில் வீட்டைவிட்டு, வேறு பெண்ணுடன் ஜீட் விட்டு விடுவார்கள். சில பெண்கள், பிற ஆடவர்களுடன் கள்ளக் காதலில் ஈடுபடுவதும் இந்த அமைப்பினால்தான். பல விதிவிலக்கு உண்டு அவையில் மாறுபடலாம்

4ல் ஜாதகரின் அன்னைக்கு தோஷம். அன்னையால் சில ஜாதகர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படலாம்.

5ல் ஜாதகருக்கு பலவிதமான சோதனைகள் ஏற்படும். எல்லாம் மனச்சோதனைதான் சிலருக்கு கண்டங்கள் ஏற்படும். நீர் நிலைகளில் விபத்துக்குள்ளாகலாம்

6ல் ஜாதகன் சுகமான பிறவி சுகமாக வாழ்வான். அவனுக்காகப் பிறர் உழைப்பார்கள். சிலருக்கு உடல் உபாதைகள், உடற் குறைபாடுகள் இருக்கும்

7ல் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, சிற்றின்ப ஈடுபாடுகள் மிகுந்தவராக இருப்பார்.

8ல் வாழ்க்கை மகிழ்ச்சியின்றி இருக்கும். என்னடா வாழ்க்கை என்கின்ற மனநிலை இருக்கும். சிலருக்குத் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் மிகுந்திருக்கும். இந்த அமைப்பு இருந்தால் ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் அதிகத் துன்பங்கள் ஏற்படும்

9ல் ஜாதகருக்குப் பிற நாடுகளில் வாழ்க்கை நடத்தும் வாய்ப்புக் கிடைக்கும். அதிர்ஷ்டகரமான அமைப்பு இது. ஜாதகனுக்கு எல்லா நன்மைகளும் ஏற்படும்.)

10ல் இந்த அமைப்புள்ள ஜாதகரின் நடவடிக்கைகள் மோசமானதாக இருக்கும். சூது, வாது, கபடம் நிறைந்ததாக இருக்கும். ஜாதகருடைய வணிகம் அல்லது தொழிலில் அது மேலோங்கியிருக்கும். அவர் மேலுள்ள நம்பகத்தன்மையை அவர் இழக்க நேரிடும்

11ல் ஜாதகருக்குத் திடீர் பண வரவுகள் உண்டு. அது இந்த இரு கிரகங்களின் தசா, புத்திகளில் கிடைக்கும். அந்த அமைப்பிற்கு, சனீஷ்வரனின் பார்வை கூடாது. பார்வை இருந்தால், ஜாதகருக்கு விபத்து ஏற்படும்.

12ல் ஜாதகருக்குப் பல விதத்திலும், மனப் போராட்டம் நிறைந்திருக்கும். மன அமைதியை இழந்து துன்பப்பட நேரிடும்….