சல்யவாஸ்து சாஸ்த்திரம்

பூமியில் செப்புதகடு , இரும்பால் செய்த யந்திரம், ப்ரயோகித்த கல், சுடுகாட்டு விருக்ஷ்க்ஷத்தில் ப்ரயோகம் செய்த பொம்மையோ அல்லது குச்சி, சுடுகாட்டு பிணம் எரித்த கரி , மற்றும் மனிதனின் எலும்புகள்,மிருகங்களின் எலும்புகள்,
இவைகள் அனைத்துமே * சல்யம் * எனப்படும்.

பொதுவாக சல்ய என்றால் எலும்பு என்பதே ஆகும் . இவைகள் நம் வீட்டில் இருந்தால் என்னென்ன உத்பாதங்கள்
( விபரீதங்கள் )ஆகும் என்பதை பார்க்கலாம்,.

1— எந்த வீட்டில் ப்ரதி
3 வருடத்திர்க்கு ஒரு முறை
மரணம் ஏற்படுகிறதோ ,
அந்த வீட்டின் கிழக்கு பாகத்தில் மனிதனின் நர சல்யம் இருக்கும்.

2—- ஏதோ காரணமாக
க்ரிமினல் கோர்ட் கேஸ்,
மற்றும் அரசாங்க சம்மந்தமான கேசுகள் இருந்தால் அந்த வீட்டின் ஆக்னேய பாகத்தில்
கழுதையின் எலும்பு இருக்கும்.

3—- வீட்டு யஜமானிக்கு
தீராத வியாதிகள் இருந்தால்
அந்த வீட்டில் தெற்கு பாகத்தில் எலும்பு இருக்கும் அதை தோண்டி எடுத்து விட்டால் நோய் போய்விடும்,. அந்த. வீட்டில்
சதா ஜ்வரபாதைகள் இருந்தால் யானையின் எலும்பு இருக்கும்..

4—— எந்த வீட்டில் நைருதி திக்கில் நாயின் எலும்புகள் இருக்குமோ ,அந்த வீட்டில் குழந்தைகள் மரணிக்கும்,
அதே திக்கில் பன்றியின்
எலும்புகள் இருந்தால் நிரந்தரம் கடன்காரணாகவே இருப்பான்,.

5—– எந்த வீட்டில் அதன் யஜமானனுக்கோ,
யஜமானிக்கோ
பைத்தியம் பிடித்து 3வருடம்
தேச தேசம் திரிவார்களோ
அந்த வீட்டில் மேற்க்கு திக்கில் குழந்தையின் எலும்பு இருக்கும்.

6— வீட்டின் வாயுஸ்தானத்தில்
சுடுகாட்டு பிணம் எரித்த கரி ,யந்திரங்கள் இவைகள்
இருந்தால் ,பஞ்ச பாண்டவர் நிலமைதான் 12 வருடம்
சத்ரு உபாதைகள் இருக்கும் ,
ஊரார் அனைவரும் விரோதிப்பார்கள்,.

7—- வீட்டின் வடக்கு திக்கில் எலும்புகள் இருந்தால்
வீடுகட்டிய 12 வருடத்தில்
நிர்தணன் அதாவது
பிச்சைகாரன் ஆவான்,
ஆட்டின் எலும்புகள்
அந்த திக்கில் புதைந்திருந்தால்
தண நஷ்டம் ஆகும்.

8—-வீட்டின் ஈசான்ய பாகத்தில் பசுவின் எலும்புகள் இருந்தால் ,அந்த வீட்டில் பசுசாலைகள் அழியும் பசுக்கள் மரணிக்கும்,இதனால் குலநாசம் ஏற்படும்,
அதே திக்கில் நாயின் எலும்பு இருந்தால் வீட்டில் நித்யமும் கலஹம் ஏற்படும் .

,9—– வீட்டு யஜாமானிக்கு
கர்ப ஸ்ராவங்களால்
வம்ச விருத்தி ஆகாமல்
குலநாசம் ஏற்பட்டால்
அந்த வீட்டின் மத்தியில்
சுடுகாட்டு விருக்ஷ்க்ஷங்களின் கட்டைகளோ பொம்மையோ
அல்லது நரசல்யமோ இருக்கும்,.

10—- வம்ச விருத்தி இருந்தும் பிள்ளைகள் ஊதாரியாக
சுற்றி திரிந்து கெட்டுபோனால்
அந்த வீட்டின் கிழக்கு பாகத்தில் சிசுவின் எலும்புகள் இருக்கும் ,அந்த வீட்டின் பசுவும் பால் தராது,.

11—- மேற்கு திக்கில் காளைமாட்டின் எலும்புகளோ எருமையின் எலும்புகளோ இருந்தால் அந்த வீட்டில்
அகால மரணம் ஏற்ப்படும்.

12—- வீட்டின் கிழக்கு பாகத்தில் தலை சம்மந்தமான எந்த
எலும்புகள் இருந்தாலும்
அந்த வீட்டில் அன்யோன்யம் இல்லாமல் போம்,
பங்காளிகள் வெட்டி குத்தி கொள்வார்கள்,
அதே எரித்த எலும்புகள் இருக்குமாயின் அந்தவீடில் உள்ளவர்கள் அமாவாசை திதி போல் வாழ்கையில் தேய்ந்து கிடப்பர் ,.

****************************

மேலே குறிப்பிட்ட அனைத்தும் வீட்டின் பூமிக்கு கீழே 10 அடி ஆழம் வரை எலும்புகள் இருந்தால் சல்ய தோஷம் அன்வனிக்கும்