சிதம்பர சக்கர விளக்கம்

ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகைப் பொன்னம் பலவன் ஞான குரு வாணியை முன்னாடு!

நமசிவய வென்றுரைத்த மந்திரம் நவ்வொடு மவ்வும் போய் மாய்கை வலமதா யவ்வான ஜீவன் வவ்வுறச் சேர்ந்திடில் சிவமினி லொன்றுய்ச் சிவமெனலாமே. இதன் பொருள் நகாரம்:- திரோதாசத்தி ஆத்துமாக்களைப் பிரபஞ்சத்திலே இச்சையை வருவிக்கும்.

மகாரம்:- கிரியாசத்தி ஆத்துமாக்களைப் பிரபஞ்சத்தில் மெய் என்று அழுத்தும் சிவத்தியே ஆசையை வருவித்துச் சிகாரத்தோடு கூடி நிற்பது.

நகாரம்:- நின்ற சிவத்திலே ஆசையை வருவித்து மகாரத்தோடு கூடி நிற்பது நின்ற வெழுத்து மூன்றும் செபிக்குமிடத்து ஒன்றாகும்.

நமசிவயம் என்றோதப்பட்ட ஐந்தெழுத்துக்குள்ளே ஐந்தெழுத்து உண்டு. ஐந்தெழுத்தினையும் மூல அட்சரமாகிய அகாரம், உகாரம். மகாரம், விந்து,நாதம் என்கிற அட்சரங்களைச் சேர்ப்பது எப்படியெனில் சிகாரத்தில் அகாரமும் வகாரத்தில்

உகாரமும்,யகாரத்தில்-மகாரமும் நகாரத்தில்-விந்தும் மகாரத்தில்-நாதமும் ஆகும். அந்தப்படிச் சேர்ந்த ஐந்தெழுத்தும் ஓடுகிற விதம் எப்படி எனில்-

நகாரமானது விந்து திரோதாசத்தி பிரபஞ்சத்திலே இச்சையை வருவிக்காமல் தவத்திலே இச்சையை வருவித்துச் சிகாரத்திலே ஐக்கிய மானது.

மகாரமானது– நாதம்-கிரியாசத்தி பிரபஞ்சத்தை செய்யென்று அழுத்தாமல் சிவத்திலே ஆசையை மெய்யென்றழுத்தி வகாரத்தில் ஐக்கியமானது நின்ற எழுத்தை ஓத முன் சொன்ன மூன்று எழுத்தும் ஒன்றாயின.

அதெப்படியெனில் பராப்ரமாகிய பரமேஸ்வரன் ஆதி காலத் திலே ஆத்துமாக்களை ரட்சிக்கத் திருவருள் புரிந்தமையால் பராபரையான சத்தியின் துடையில் தம்முடைய பெருவீரல் அங்கு~;டம் கொண்டு கீறுகயினாலே பராசத்தி பொருக்கமாட்டாமல்”ஓ வென்றனள்”அ;பபோது பராபரமாகிய பரமேஸ்வரன்”ஆ”வென்றமைத்தார் அவ்வெழுத்து‘அகாரமானது’ இந்த இரண்டெழுத்துக்களும் சத்தியும், சிவமுமானது இவ்விரண்டு எழுத்தும் ஓரட்சரமானது எப்படியென்ல் –

அகாரம் இலக்கியத்தில்-அ(8) பின் சொன்ன உகாரம் இலக் கியத்தில்-உ(2)இவ்விரண்டுமாய் தொகைக்கு–ய.(10)ஆயின.

யவ்வானது ஜீவன்.அந்தச் ;சீவனைச் சத்தியும் சிவமுமாகக்கூடி ஆத்துமாக்களை சிநேகத்தை வருவித்தது.நவ்வானது திரோதய சத்தி இச்சிநேகிதத்தை மெய்யென்றழுத்தி மிகவும் இருதலை உண்டாக்கினது.

மகாரமானது—கிரியாசத்தி இவை இரண்டிலும் பற்றாமல் நிற்கின்றது

யவ்வானது–ஜீவன்-இவை இரண்டும் விந்து நாதமானது.இந்த உருக்கத்தைச் சத்தி பொறாள் என்றறியாமல் நின்றது. கேவலமான இருள் எப்போது பெறுவோமென்ற விகாரம் சகலமான பகல் இவை இரண்டுக்கும் இரவு பகல் என்று பெயர். அதுவுமன்றி ஞான முறைக்குச் சகலாவஸ்தை என்றும்,கேவலாவஸ்தை என்றும் பெயர்.

சிதம்பரத்திலே சிநேகம் இருக்கையினாலே பராபரமாகிய பரமேஸ்வரம் மானைப்பிடிக்க மான்வேடங் கொண்டது போல் இராப்பகலே குரு வென்று வடிவெடுத்துக் கொண்டு ஆதி கபிலாமா முனிவர் திருவள்ளுவ நாயனார் வடிவமாய் திருக்குருந்தீஸ்வரராகிய திருமூலத்தேவருக்குத் திருவாய் மலர்ந்து அருளிய உபதேச வைப்பாகும்.

இன்னமும் தெளிவாகச் சொல்லப் போனால் 5புலன்களைக் குறிப்பதாகும்.

பிரிதிவு-சதுரம்,அப்பு,முக்கோணம்-தேயு,அறுகோணம்- வாயு,வட்டம்- ஆகாயம் ஆகும்.

இவை முறையே மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய புலன்களைக் குறிக்கும்.

ஆறு ஆதாரங்களில் மூலாதாரம் என்பது மனித உடலில் மூலத்துவாரமாகிய இடம் முதல் சகஸ்ரதளம் என்று சொல்லக் கூடிய உச்சித் துளை வரை நிற்பதாகும்.அடுத்து ஸ்வாதி~;டானம் மணிபுரகம் அநாகதம் விசுத்தி ஆக்ஞை முதலிய ஸ்தானங்களில் பஞ்ச அட்சரம் புதம்,பஞ்ச கோசம்,பஞ்ச பீசம்,பஞ்ச இலக்கம்,பஞ்சபட்சி இன்னும் பிறவும் நின்று தொழிற் படுகின்றது.

இதுவே சிதம்பர சக்கரம்(திருவம்பல சக்கரம்) ஆகும்.முறையான தவப் புயிற்சி மற்றும் மந்திரப் பயிற்சியின் மூலமாக மேற் சொன்னபடி பஞ்சாட்சரங்களை இயக்கி வழி நடத்துகிறவர்களுக்கு சகல காரிய சித்தியும்,கிரக தோச நிவர்த்தியும்,இன்னமும் வீடு பேறும் உண்டாகும்.இதுவே சுட்சும விளக்கம் ஆகும்.

இன்னும் இது பற்றி விளக்கம் எழுதப் புகின் மிகவும் விரிவுபடும் என்பது கருதி இத்துடன்———–

இது பற்றி கொங்கணவ மஹாரி~p தமது வாலைக்கும்மியில் சொல்லி இருப்பதைக் கீழே காண்கவும்.

செகம்ப டைத்ததும் அஞ்செழுத்தாம் பின்னும் சீவன் படைத்ததும் அஞ்செழுத்தாம் உகமு டிந்தது மஞ்செழுத் தாம்பின்னும் உற்பன மானது மஞ்செழுத்தாம்.

ஆயனு மைந்தா மெழுத்துக்குள் ளேயறி வாயனு மைந்தா மெழுத்துக்குள்ளே வாயனு மைந்தா மெழுத்துக்குள் ளேயிந்த வாலையு மைந்தா மெழுத்துக்குள்ளே.

சிதம்பர சக்கரந் தானறி வாரிந்தச் சீமையி லுள்ள பெரியோர்கள் சிதம்பர சக்கர மென்றால் அதற்குள்ளே தெய்வத்தை யல்லோ அறியவேணும்.

Leave a comment