சிரார்த்த நியமங்கள்

இப்படி செய்வதற்கு பெயர் சிரார்த்தம், தெவசம். சிரத்தையாக செய்வதுதான் சிரார்த்தம் எனப்படும். கடமைக்கு செய்தால் அது பலிக்காது .பலன் கொடுக்காது.

இன்று இதுபோல் கிடைப்பது சிரமம்தான் என்றாலும், இப்படி செய்தாலுமே பலன் கிடைப்பது சிரமம் என்கிறபோது, நாம் நமது இஷ்டத்துக்கு செய்கிறோமே, பயமே இல்லாமல், அதற்குதான் இந்த பதிவு. முடிந்தவர்கள், முடிந்ததை கடைபிடியுங்கள்.

உங்கள் குழந்தைகளை படிக்க வைக்கலாம்,வைத்தியம் பார்க்கலாம், ஏன் திருமணம் கூட செய்துவிடலாம். ஆனால் அதைவிட மிகவும் சிரமம் ஒரு சிரார்த்தம் செய்ய என்பதனை மட்டும் இங்கே புரிந்துகொள்ளுங்கள் அன்பர்களே.

வருடாவருடம் எந்த திதியில் இறந்தார்களோ அந்த திதியில்தான் செய்யவேண்டும்.ஆங்கில தேதியில் செய்தால் விலாசம் எழுதாத கடிதம் போல் ஆகும்.

அமாவாசைக்கும் பவுர்ணமிக்கும் நடுவில் வந்தாலும் சரி, இல்லை பவுர்ணமிக்கும் அமாவாசைக்கும் நடுவில் வந்தாலும் சரி , அந்த பதினைத்து நாட்கள், அந்த நபர்,ஷேவிங் செய்யக்கூடாது.கடைகளில் சாப்பிடக்கூடாது.சொந்தக்காரர்கள் வீடு, திருமண நிகழ்ச்சி எதிலுமே சாப்பிடக்கூடாது .தனது மனைவி அல்லது தாயார் சமைத்ததைதான் சாப்பிடவேண்டும்.

அதிலும், பூண்டு,பட்டை, கிராம்பு, ஏலக்காய் ,கசகசா கறிமசாலா,வெங்காயம்,முள்ளங்கி முருங்கைகாய் இவைகளை இந்த காலத்தில் வீட்டிலும் சாப்பிடக்கூடாது .தினமும் இரண்டுவேளை குளிக்கவேண்டும். காலை ஒரு வேலை சாப்பாடு, இரவு ஒரு வேலை டிபன் .

இந்த டிபனிலும்,இட்லி,தோசை ,கூடாது. அதாவது அரிசி சம்பந்தம் இருக்ககூடாது .முக்கியமாக ,தாம்பத்தியம் கூடவே கூடாது .சினிமா,போன்ற கலை நிகழ்சிகளை பார்த்து ரசிக்ககூடாது. மொத்தத்தில், பித்ருக்களின் ஞாபகமாகவே இருத்தல் வேண்டும். தொடரும்.

Leave a comment