சிரார்த்த விதிகள்

 1. சிரார்தத்து அன்று கட்டிங் ஷேவிங் செய்யகூடாது.
 2. இந்த நாள் முழுவதும் கோபமே படக்கூடாது
 3. சிரார்த்த மாதத்தில் என்னை தேய்த்து குளிக்கக்கூடாது
 4. மாதாந்திர தீட்டு ஆன அந்த மூன்று நாட்கள் ,இவர்களின் கணவனை சிரார்தத்துக்கு சொல்லக்கூடாது.
 5. மனைவி,குழந்தை இல்லாத ஆட்களையும் விட்டுவிடவேண்டும்
 6. பெண் கர்பிணியாக இருந்தால், அவளின் கணவனையும் அழைக்ககூடாது
 7. தனது பெற்றோருக்கு திதி செய்யாத பிராமணனையும் சொல்லக்கூடாது
 8. சிரார்த்த மாதம் முழுவதும் ஹோட்டலில் சாப்பிடக்கூடாது
 9. இன்று காலை நனைத்து உலர்த்திய துணியைதான் அன்று உடுத்தவேண்டும்.
 10. மாதாந்திர தீட்டு குளித்த அன்று உள்ள பெண்கள் சமைக்ககூடாது
 11. சமையல் செய்பவர்கள், நடுவில் அவர்களுக்கு உடலுபாதையின் காரணமாக பாத்ரூம் செல்ல நேர்ந்தால், அவர்கள், குளித்துவிட்டுத்தான் மறுபடியும் சமைக்க வரவேண்டும்.
 12. சமைப்பவர்கள் பேசாமல் மௌனமாக இருந்து சமையல் செய்யவேண்டும்
 13. சமைக்கும் இடத்திலும், சாப்பிடும் இடத்திலும் இரும்பு பாத்திரம் உபயோகிக்கக்கூடாது.இதை உபஹோகித்தால், பித்ரு பயப்படுவார்கள் உள்ளே வருவதற்கு.இதுபோல் என்றால்,நம்மில் சிலபேர் நாய் கட்டிய வீட்டுக்கு செல்ல பயப்படுவதுபோல் என்பதை உணர்க.
 14. அன்று பெண்களும் ஆண்களும் நெத்திக்கு எதுவும் இட்டுக்கொள்ளகூடாது
 15. தலை மயிரை அவிழ்த்துவிட்டுக்கொண்டு சமைக்ககூடாது
 16. இன்று சமைத்த சாப்பாட்டை,வேறு யாருக்கும் தரக்கூடாது.
 17. இன்று காலை சமைத்த உணவை, இரவு, வீட்டில் யாரும் சாப்பிடக்கூடாது. அளவாகவே சமைக்க வேண்டும்.
 18. இன்று காக்காய் சாதத்தை கிழக்கு பார்த்து எடுத்தால் உங்களுக்கு செல்வம் சேரும்.
 19. மேற்கே எடுத்தால் வெளியூர் பயன் ஏற்படும்.
 20. இன்று வீட்டில் வாசலில் கோலம் போடக்கூடாது.திதி முடிந்தவுடன்தான் வீட்டில் கோலம் போடவேண்டும் தீபம் ஏற்றவேண்டும்
 21. இதுபோல் 315 சட்டங்கள் இருக்கிறது அன்பர்களே.இதுபோதும் என்று தோன்றுகிறது.
 22. ஆகவே சிரார்த்தம் என்பது,அவ்வளவு ஈசி இல்லை என்பதே இதன் நோக்கமாகும். இந்த உலகத்தில் நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனான் மிகவும் கஷ்டம் என்பது சிரார்த்தம் என்பதனை புரிந்துகொள்ளவே இந்த பதிவு ஆகும் அன்பர்களே.
 23. ஆகவே இனியாவது சிரத்தையாக உங்களால் முடிந்த அளவு புரிந்துகொண்டு இந்த நாளை சிறப்பாக கொண்டாடுங்கள்.
 24. சில பேர் லீவு கிடைக்கவில்லை என்பார்கள். அப்படி சொல்லாதீர்கள். பிற்காலத்தில் மெடிக்கல் லீவ் போடும்படி சூழ்நிலை வந்துவிடும் அன்பர்களே.

Leave a comment