பொதுவாக சிவராத்திரி மாதாமாதம் வருகிறது.மாசி மாதம் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி எனப்படும்.
இந்த சிவராத்திரியில் , நான்குகால பூஜையாக வைத்து இருக்கிறார்கள். மாதா மாதம் இதுபோல் செய்வது மிகவும் புண்ணியம் ஆகும்.
முதலாம் ஜாமம் – மாலை 6 மணி –
=================================
இந்த ஜாமத்தில் பிரும்மா சிவனுக்கு பூஜை செய்கிறார்
. இந்த பூஜையை நாம் செய்து பூஜிப்பதால் பிறவியில் இருந்து விடுபட்டு நன்மை அடையலாம்.
பூஜை முறை. பஞ்சகவ்யம் – அதாவது பால், தயிர்,நெய்,கோமியம்,பசு சாணம் -இவைகளால் சிவனுக்கு அபிஷேகம் செய்தல்
. பிறகு வில்வம் சாத்தி தாமரைப்பூ கொண்டு அர்ச்சனை செய்யவேண்டும். பயத்தம் பருப்பு சேர்ந்த பொங்கலை நைவேதியமாக படைக்கவேண்டும்.
– ரிக் வேதம் சொல்லவேண்டும்.
இரண்டாம் ஜாமம் – 9 மணி இரவு
===============================
இந்த ஜாமத்தில் மகா விஷ்ணு சிவனை பூஜிக்கிறார்.
இந்த காலத்தில் நாம் பூஜை செய்யும்போது தன தானிய சம்பத்துகள் நமக்கு கிடைக்கிறது.
பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து சந்தனமும் தாமைரைபூவும் சாத்தி துளசியால் அர்ச்சித்து, பாயசம் நெய்வேதியம் செய்து வழிபடவேண்டும்.
இப்போது யஜுர் வேதம் சொல்லவேண்டும்.
மூன்றாம் ஜாமம் – இரவு 12 மணி
===============================
இப்போது சக்தியில் வடிவமாக அம்பாளே சிவனுக்கு போசை செய்கிறாள்.
இது லிங்கோத்பவ காலம் எனப்படும். சிவா பெருமானின் அடி, முடி இரண்டையும் காண வேண்டி,பிரும்மா அன்னப்பரைவையாக மேல்நோக்கியும் மகா விஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்பு உடையது இந்த காலம். -எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாது.
தேனால் அபிஷேகம் செய்து அரைத்த பச்சை கற்பூரத்துடன் ஜாதி முல்லை பூவை சாத்த வேண்டும். மூன்று இலைகள் கொண்ட வில்வத்தால் அர்ச்சனை செய்து அன்னம் நெய்வேதியம் செய்ய வேண்டும்.
இப்போது – சாம வேதம் சொல்லவேண்டும் .
நான்காம் காலம் -அதிகாலை மூன்று மணி -3 மணி
===============================================
முப்பத்தி முக்கோடி தேவர்களும், ரிஷிகள், பஹுத கணங்கள், மனிதர்கள், அனைத்து ஜீவராசிகளும் பூஜை செய்கின்றன. இப்போது விரதம் இருப்பதால் பதவி உயர்வு கிடைக்கும்.இல்லறம் இன்பமாக திகழும். நினைக்கின்ற காரியம் நடக்கும்.
கரும்ம்பு சாற்றால் அபிஷேகம் செய்து,அரைத்த குங்குமப்பூவுடன் நந்தியாவட்டை பூவும், சாத்தி, நீலோற்பல பூவால் அர்ச்சனை செய்ய வேண்டும். அன்னம் படைத்து வழிபடவேண்டும்.
இப்போது- அதர்வண வேதம் சொல்லவேண்டும்.
சிவராத்திரி ஐந்து விதம்.
1.. வருடத்துக்கு ஒரு தடவை வரும் மாசி மாத சிவராத்திரி. இதுவே பிரதானமான பெரிய சிவராத்திரி ஆகும்.
2.திங்கள்கிழமை முழுவதும் அமாவாசையாக இருந்தால் அது யோகா சிவராத்திரி எனப்படும்.
3.மாதாமாதம் ஒன்று வீதம் வருடம் பூராவும் வரும் ராத்திரி நித்திய சிவராத்திரி எனப்படும்.
௪.தை மாதம் தேய்பிறை பிரதமை தொடங்கி பதின்மூன்று நாட்கள் வரை தினமும் ஒரு வேலை மட்டும் உணவு அருந்தி பதினாலாவது நாளான சதுர்தசி அன்று உபவாசம் இருப்பது பட்ச சிவராத்திரி எனப்படும்.
5.மாதாமாதம் வரும் மாத சிவராத்திரி
ஆகவே அன்பர்களே, உங்களுக்கு எது எப்படி சௌகரியமோ அதன் படி விரதம் இருந்து புண்ணியத்தை அடையுங்கள் அன்பர்களே.