சென்னையில் பார்க்கவேண்டிய 10 கோவில்கள்!!

சென்னையில் பார்க்கவேண்டிய 10 கோவில்கள்!!

1. அருள்மிகு பார்த்தசாரதி கோயில்,
திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி கோயில்
மூலவர் : பார்த்தசாரதி
அம்மன்/தாயார் : ருக்மிணி
இருப்பிடம் : சென்னையின் மிக முக்கிய பகுதி திருவல்லிக்கேணி என்பதால் பேருந்து வசதி நிறைய உள்ளது.மின்சார ரயில் வசதியும் திருவல்லிக்கேணிக்கு உண்டு
போன் : +91- 44 – 2844 2462, 2844 2449.

பிரார்த்தனை : இங்குள்ள நரசிம்மரை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் கிடைக்கும். தவிர இத்தலத்து பெருமாளை மனமுருக வேண்டினால் கல்யாண வரம், குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை ..

சிறப்பு : பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 61 வது திவ்ய தேசம். 9 அடி உயர மூலவர், சாரதிக்குரிய மீசையோடு இருத்தல் இத்தலத்தில் மட்டுமே என்பது மிக முக்கிய சிறப்பாக .

2. அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில்,
மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில்
மூலவர் : கபாலீசுவரர்
அம்மன்/தாயார் : கற்பகாம்பாள்
இருப்பிடம் : சென்னை நகரின் மத்தியில் அமைந்துள்ளது. சென்னையின் மிக முக்கிய பகுதி மயிலாப்பூர் என்பதால் பேருந்து வசதி நிறைய உள்ளது. மின்சார ரயில் வசதியும் மயிலாப்பூருக்கு உண்டு.
போன் : +91- 44 – 2464 1670.

பிரார்த்தனை :
இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது இத்தலத்தின் மிக முக்கிய சிறப்பு. உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் இத்தலத்து அம்பாளை வணங்கினால் விரைவில் …
சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 257 வது தேவாரத்தலம் …

3. அருள்மிகு மருந்தீஸ்வரர் கோயில்,
திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் கோயில்
மூலவர் : மருந்தீஸ்வரர்
அம்மன்/தாயார் : திரிபுரசுந்தரி
இருப்பிடம் : சென்னை திருவான்மியூரில் கிழக்கு கடற்கரை சாலையில் கோயில் அமைந்துள்ளது. திருவான்மியூருக்கு பஸ் வசதி உள்ளது.
போன் : +91 – 44 – 2441 0477.

பிரார்த்தனை : சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வணங்கி, விபூதி பிரசாதம் உண்டால் தீராத நோய்கள், பாவங்கள் தீரும், சிவன் காட்சி தந்த வன்னி மரத்தை சுற்றி வணங்கிட முக்தி கிடைக்கும் என்பது …
சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், மூலவரின் விமானம் சதுர்வஸ்தம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 258 வது …

4. அருள்மிகு அஷ்டலட்சுமி கோயில்,
பெசன்ட் நகர் அருள்மிகு அஷ்டலட்சுமி கோயில்
மூலவர் : அஷ்டலட்சுமி, மகாலட்சுமி, மகாவிஷ்ணு,
அம்மன்/தாயார் : ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி,கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி
இருப்பிடம் : சென்னை நகரின் மத்தியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில் அமைந்துள்ளது.

போன் : +91- 44-2446 6777, 2491 7777, 2491 1763
பிரார்த்தனை : இங்கு அஷ்ட லட்சுமிகளாக அருள் பாலிக்கும் மகாலட்சுமியை வணங்கினால் சிறப்பு வாய்ந்த வாழ்க்கை அமையப்பெறலாம். தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கும் ஒவ்வொரு தெய்வங்களும் தனித்தனி .

சிறப்பு : கோபுரத்தில் ஓம்கார வடிவத்தில் அஷ்டாங்க விமானத்துடன் கூடியதாக திருக்கோயில் அமைந்துள்ளது. (ஓம்கார சேத்திரம்) கோபுரத்தின் நிழல் பூமியில் விழாது.இது தஞ்சை பிரகதீஸ்வரர் ..
.
5. அருள்மிகு கந்தசுவாமி கோயில்,
கந்தக்கோட்டம் அருள்மிகு கந்தசுவாமி கோயில்
மூலவர் : கந்தசுவாமி
அம்மன்/தாயார் : வள்ளி, தெய்வானை
இருப்பிடம் : சென்னை பாரிமுனை அருகிலுள்ள கந்தகோட்டத்தில் கோயில் அமைந்துள்ளது. சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஐந்து நிமிட நடையில் கோயிலை அடையலாம்
போன் : +91- 44 -2535 2192

பிரார்த்தனை :
பால்குடம், பால்காவடி, முடிகாணிக்கை, திருக்கல்யாண உற்சவம். செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பன்னீர் அபிஷேகம் நடக்கும் நேரத்தில் சுவாமியை வழிபட்டால் குடும்பம் சிறக்கும், ஐஸ்வர்யம் …

சிறப்பு : உற்சவர் முத்துக்குமாரர் தனிக்கொடிமரத்துடன் உள்ளார். இவர் தனது முகத்தில் புள்ளிகளுடன் மிகவும் அழகு பொருந்தியவராக காட்சி தருகிறார். விசேஷ காலங்களில் இவருக்கே பிரதான பூஜை …

6. அருள்மிகு வடபழநி ஆண்டவர் கோயில்,
வடபழநி அருள்மிகு வடபழநி ஆண்டவர் கோயில்
மூலவர் : வடபழநி ஆண்டவர்
அம்மன்/தாயார் : வள்ளி, தெய்வானை
இருப்பிடம் : சென்னை நகரின் மத்தியில் கோயில் அமைந்துள்ளது. சென்னையின் பிற முக்கிய பகுதியிலிருந்து வடபழநிக்கு பஸ் வசதி உள்ளது.
போன் : +91 44 2483 6903

பிரார்த்தனை :
இங்குள்ள வடபழநி ஆண்டவரை வழிபட்டால் குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கும்.புதிய தொழில் தொடங்க , வியாபாரம் விருத்தியடைய இத்தலத்து முருகனை வேண்டிக் கொள்ளலாம். கல்யாண வரம், குழந்தை வரம் …
சிறப்பு : இத்தலத்தில் பாத ரட்க்சையுடன் (காலணிகள்) முருகன் அருள்பாலிப்பது விசேஷம்அங்காரகன் சன்னதி இத்தலத்தில் தனி சன்னதியாக இருப்பது கூடுதல் சிறப்பு.இவர் முருகனுக்கு மிகவும் .
..
7. அருள்மிகு வேதபுரீஸ்வரர் கோயில்,
திருவேற்காடு அருள்மிகு வேதபுரீஸ்வரர் கோயில்
மூலவர் : வேதபுரீஸ்வரர்
அம்மன்/தாயார் : பாலாம்பிகை
இருப்பிடம் : சென்னை கோயம்பேட்டிலிருந்து(10 கி.மீ) பூந்தமல்லி செல்லும் வழியில் திருவேற்காடு உள்ளது.
போன் : +91- 44-2627 2430, 2627 2487.

பிரார்த்தனை : இத்தல தீர்த்தத்தில் ஞாயிறு தோறும் நீராடி வந்தால் தோல் சம்பந்த நோய்கள் தீரும் என்பது …
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். லிங்கத்தின் பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் அமர்ந்துள்ளது தனி சிறப்பு. …

8. அருள்மிகு காமாட்சி கோயில்,
மாங்காடு அருள்மிகு காமாட்சி கோயில்
மூலவர் : காமாட்சி
இருப்பிடம் : சென்னை கோயம்பேட்டில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் இத்தலத்துக்கு பஸ் உண்டு. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : சென்னையிலிருந்து – 20 கி.மீ. தாம்பரத்திலிருந்து – 22 கி.மீ
போன் : +91- 44 – 2627 2053, 2649 5883.

பிரார்த்தனை : இத்தலத்தில் ஆறு வார வழிபாட்டு முறை நடைமுறையில் உள்ளது. வாரத்தில் ஏதேனும் ஒருநாளில் எலுமிச்சைக் கனியுடன் அம்மனைத் தரிசித்து பின்னர் அதே கிழமைகளில் தொடர்ந்து ஆறு வாரங்கள் …

சிறப்பு : அம்மன் ஈசனை நோக்கி ஒற்றைக்காலில் அக்னிதவம் இருந்த இடம். இத்தலத்தில் தவம் இருந்து விட்டு பின்புதான் காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரரை திருமணம் செய்து கொண்டார். இங்கு ஸ்ரீ சக்ரம்தான் …

9. அருள்மிகு பாலசுப்பிரமணியர் கோயில்,
சிறுவாபுரி, சின்னம்பேடு அருள்மிகு பாலசுப்பிரமணியர் கோயில்
மூலவர் : பாலசுப்பிரமணியர்
இருப்பிடம் : சென்னை கோயம்பேடு பஸ்ஸ்டாண்டிலிருந்து(30கி.மீ) கும்மிடிபூண்டி, கவரப்பேட்டை பஸ்களில் சிறுவாபுரி புதுரோடு ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து மேற்கே 3 கி.மீ தூரம் சென்றால் சிறுவாபுரியை அடையலாம்.
போன் : +91- 94442 80595, 94441 71529

பிரார்த்தனை : இத்தலத்திற்கு வருபவர் கடுமையாக விரதமிருந்து பசி பட்டினியுடன் தரிசிக்க வேண்டியதில்லை. இங்கு நேரில் வரவும் வேண்டியதில்லை. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது போல, …
சிறப்பு : முருகனைத்தவிர அனைத்து தெய்வங்களும் மரகதத்தால்

10. அருள்மிகு தேவநாதப்பெருமாள் (யோக ஹயக்ரீவர்) கோயில்,
செட்டி புண்ணியம் அருள்மிகு தேவநாதப்பெருமாள் (யோக ஹயக்ரீவர்) கோயில்
மூலவர் : வரதராஜப்பெருமாள்
இருப்பிடம் : சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ள சிங்கப்பெருமாள் கோவிலிலிருந்து வலது புறத்தில் 3 கி.மீ. தூரத்தில் செட்டிப்புண்ணியம் என்ற ஊரில் யோக ஹயக்கிரீவர் கோயில் அமைந்துள்ளது. இது தேவநாதப்பெருமாள் கோயிலாக இருந்தாலும் கூட ஹயக்கிரீவர் கோயில் என்றால் தான் அனைவருக்கும் தெரியும்.
போன் : +91 8675127999

பிரார்த்தனை : கல்வியில் சிறந்து விளங்கவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், திருமணத்தடை நீங்கவும், வியாபாரம் செழிக்கவும், வழிபாடு …
சிறப்பு : யோக ஹயக்ரீவர் நான்கு கைகளுடன் சங்கு சக்கரதாரியாக யோக நிலையில் இருப்பது ..

payan adaiyungal

இந்த தகவலை பகிரவும்

Comments

Leave a Reply