சௌந்தர்யலஹரி – 1

சௌந்தர்யலஹரி ., மொத்தம் நூறு இருக்கிறது., தனித்தனியாக பார்க்கவேண்டும் அப்போதுதான் புரியும் அன்பர்களே.

ஆகவே தொடர்ந்து படியுங்கள். உலகில் அனைத்துக்கும் மூலாதாரமாய் இருப்பவள்தான் ஆதிபராசக்தி எனப்படும், அம்பாள் ஆவாள்.

ஆதிசங்கரர் குரு, நமக்காக இதை தெளிவாக சொல்லி இருக்கிறார். இதில் இல்லாததே இல்லை. ஆகவே, அன்பர்களே, இதை தினமும் சொல்லி வாருங்கள். உங்களுக்கு எல்லாம் மன நிம்மதி கிடைக்கும்.

சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குசலக ஸ்பந்திது மபி
அதஸ்த்வா மாராத்யாம் ஹரி ஹர விரிஞ்சாதிபி ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத மக்ருத புண்ய பிரபவதி

அர்த்தம்.

தாயே, பரமசிவன் பராசக்தியாகிய உன்னுடன் சேர்ந்து இருந்தால்தான் நீ இந்த உலகை படைக்கமுடியும், காக்க முடியும், அழிக்கமுடியும். நீ அவருக்கு உறுதுணையாக இல்லாவிடில் அந்த இறைவன் அசையவும் முடியாது. எனவே, ஹரி,ஹரன், பிரம்மன், எல்லோரும் போற்றும் பெருமை பெற்ற உன்னை முற்பிறவிகளில் புண்ணியம் செய்யாதவன் எப்படி துதிக்கமுடியும்.

கருத்து. புண்ணியம் செய்தவன் எவனோ, அவனே, அம்பாளை வணங்குவான் என அர்த்தம் இங்கு ஆகிரதை கவனிக்கவும்.

காலையில் நீங்கள் கிழக்கு முகமாக அமர்ந்துகொண்டு இந்த மந்திரத்தை பன்னிரண்டு நாட்கள் தினமும் ஒரு நாளைக்கு ஆயிரம் தடவை சொன்னால் தடைகள் நீங்கி எடுத்த காரியம் எல்லாம் நிறைவேறும்.நன்மைகளை பெறலாம்.

சாமிக்கு நெய்வேதியம் .தினமும் , நெய் சேர்த்த சாதமும் உளுந்து வடையும்.

அன்பர்களே இதுதான் முதல் மந்திரம். இதுபோல் நூறு இருக்கிறது. ஆகவே தொடர்ந்து பார்த்து வரவும்.

Leave a comment