சௌந்தர்யலஹரி – 2

தேவியின் பாததூளி மகிமை

தநீயாம்சம் பாம்ஸும் தவ சரண பங்கேருக பவம்
விரிஞ்சிஹி சந்சின்வன் விரசயதி லோகா நவிகலம் வஹத்யேனம்சௌரிஹி கதமபி சஹஸ்ரேன சிரஸாம் ஹர ஸம்க்ஷுத்யைனம் பஜதி பஸிதோத்தூளன விதிம்

தாயே தாமரை மலர்கள் போன்ற உன் திருவடிகளில் இருந்து தோன்றிய மிகச் சிறந்த தூளியை ஒவ்வொன்றாக சேர்த்து வைத்துக்கொண்டு பதினான்கு உலகங்களையும் பிரம்ம தேவன் விசாலமாக படைக்கிறான். அதேபோல் மகாவிஷ்ணுவும் ஆதிசேஷன் என்கிற உருவில் பதினான்கு லோகங்கலாக உருவாகியுள்ள இந்த பாத தூளியை தன் ஆயிரம் தலைகளால் சிரமப்பட்டு தாங்குகிறார்.பரமசிவனும் உன் பாத தூளியை மேலும் நன்கு பொடி செய்து விபூதியாக உடல் முழுவதும் தரிக்கிறார்.

காலையில் வடக்கு முகமாக அமர்ந்து இந்த மந்திரத்தை ஆயிரம் தடவை , ஐம்பத்தி ஐந்து நாட்கள் ஜபம் செய்பவர்களுக்கு, ஞானம்,செல்வம்,புத்திரன்,பதவி,புகழ், இவைகள் உண்டாகும். ஜடப் பொருள்களால் உண்டாகும் தடைகள் நீங்கும்.

நெய்வேதியம் = பால் பாயசம் தினமும்.

Leave a comment