சௌந்தர்யலஹரி – 3

விரும்பியதை அளிக்கும் பாததூளி

அவித்யானா மந்தஸ்திமிர மிஹிர த்வீப நகரீ
ஜடானாம் சைதன்ய ஸ்தபக மகரந்த ஸ்ருதிஜரி
தரித்ராணாம் சிந்தாமணி குண நிகா ஜன்மஜலதௌ
நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு வராஹச்ய பவதி

ஹே, அம்பிகையே, இந்த உன்னுடைய பாததூளி ,அஞ்ஞானமாகிய இருளை அகற்றும் பகலவன் தோன்றும் தீவு , மூடர்களுக்கு ஞானமென்னும் தேன் பிரவாகம். ஏழைகளுக்கு சிந்தாமணி, பிறவிக்கடலில் மூழ்கியவர்களுக்கு ,நீ வராகப்பெருமானின் கோரப் பல்

காலையில் வடகிழக்கு திக்கு நோக்கி அமர்ந்து நாற்பத்தி ஐந்து நாட்கள் தினமும் இதை இரண்டாயிரம் தடவை ஜபம் செய்தால், வேதங்களிலும் சகல கலைகளிலும் வல்லமை உண்டாகும். செல்வமும் கிடைக்கும்.

நிவேதனம் = உளுந்து வடை

Leave a comment