சௌந்தர்யலஹரி – 5

ஸ்ரீ தேவி பூஜை மகிமை

ஹரிஸ் த்வா மாராத்ய பிரணத ஜன சௌபாக்ய ஜனனீம்
புரா நாரி பூத்வா புரரிபுமபி க்ஷோப மனயத்
ச்மரோபி த்வாம் நத்வா ரதி நயன லேஹ்யேன வபுஷா
முனீனா மப்யந்த ப்ரபவதி ஹி மோஹாயமகதாம்

தாயே நீ வணங்கியவர்களுக்கு செல்வமெல்லாம் அளிப்பவள்.உன்னை பூஜித்த்துத்தான் ஒரு சமயம் மகாவிஷ்ணு பெண் உருவம் கொண்டு பரமசிவனையும் மோகமடையச் செய்தார் . அவ்விதமே மன்மதனும் உன்னை வணங்கித்தான் மிக்க அழகு பெற்று,முனிவர்களின் மனத்தையும் கலங்கும்படி செய்ய முடிகிறது.

காலையில் கிழக்கு முகமாக அமர்ந்து எட்டு நாட்கள் தினந்தோறும் இரண்டாயிரம் தடவை ஜபம் செய்தால் குடும்பங்களிலே ஆண் பெண் ஒற்றுமை ஏற்படும்.எல்லோரையும் வசீகரிக்கும் சக்தி வரும். அதாவது உங்களை எதிர்த்தவர்கள் மதிப்பர்.

நிவேதனம் = வெண் பொங்கல்

Leave a comment