ஜோதிடத்தின் சாரம்

அன்பர்களே. ஜோதிடத்தின் சாரம் என்ன என்பதனை கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்.

பரமாத்மாவாகிய ஈஸ்வரன், ஜீவாத்மா ஆகிய நம்மைப்போல் உள்ள மனிதர்களை இயக்கி தன்னுள் ஐக்கியப்படுத்துகிறான். இதன் வெளிப்பாடே , நாம் மோட்சம் என்று சொல்லுகிறோம்.

ஒருவருக்கு, உப்பு அதிகம் தேவைபடுகிறது. ஒருவருக்கு காரம் அதிகம் தேவைபடுகிறது உணவில். இது அவரவர்களின் மன வெளிப்பாடுதானே அன்பர்களே.

அதேபோல்தான் அன்பர்களே, இந்த உடலில் இருக்கும் ஜீவாத்மாவாகிய நமக்கு எப்படி டேஸ்ட் வித்தியாசப்படுகிறதோ , அதுபோலவே எண்ணங்களும் வித்தியாசப்படுகின்றன. இதை இயக்குபவன், இறைவன், இதைத்தான் ஜாதகம் என சொல்லுகிறோம். ஆகவே, உங்களின் டேஸ்ட் எப்படியோ அப்படிதான், வாழ்க்கை என்பதுபோல, உங்களின் உள் எண்ணங்கள் என்ன என்பதனை சரியாக சொல்லுபவையே கட்ட அமைப்பு ஆகும்.

அதனால், நாம் சிலதை மாத்தி யோசிக்கும்போது நமக்கு நடப்பதில்லை. காரணம், ஜீவாத்மாவின் சுவையை ஒட்டியே, கிரகங்கள் அமைவதுபோல, நமக்கு வாழ்க்கையும் அமைகிறது