ஞானம் – மோட்சம் ஒரு அறிவு

1. இலக்கினத்திற்கு 12ல் குரு, கேது இருந்தாலும்,

2. இலக்கினத்திற்கு 12ல் இருக்கும் கேதுவை, குரு கண்டாலும்,

3. 12ல் இருக்கும் குருவை, 5,9க்குடையவர்கள் கண்டாலும்,

4. உச்சம்பெற்ற கிரகம் 12ல் இருந்து, அதை சுபக்கிரகம் கண்டாலும்,

5. 10ம் அதிபதி மூன்றுக்கு மேற்பட்டகிரகங்களுடன் கூடி கேந்திர, திரிகோணங்களில் இருக்கவும்,

6. 10ம் வீடு குருவிடையதாகவோ, அல்லது 10மிடத்தைக் குரு கண்டாலும்,

7. ஒன்பதாமிடத்தில் ஒருபலமான கிரகம் கேதுவுடன் இணைந்திருந்தாலும், அல்லது குருவீடு 12மிடமாகி, அதில் கேது இருக்க, குருவால் பார்க்கப்பட்டாலும்,

8. 5,9 ம் அதிபதிகள் நல்லநிலையில் இருக்க, 5,9,12 ஆகிய இடங்களில் ஏதிலாவது குரு_கேது இணைந்திருந்திருந்தாலோ அல்லது 12ம் இடம் மீனம், விருச்சிகமாகி, அதில் குரு_கேது இருந்தாலோ ஞானம் பெற்று, மோட்சயோகம் ஏற்படும். இந்த செய்தியை, ஒரு கதையோடு காண்போம்.

போதிமரத்தடியில் ஞானம் பெற்றபின், போதனைக்காக புத்தர், ஒரு ஊரில் இருந்து மறு ஊருக்கு செல்லும் போது, ஒரு கிராமத்தை கடந்து செல்லவேண்டும். அப்படி கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும், அக்கிராம மக்கள் ஒன்றுதிரண்டு புத்தரை தினமும் அடிக்கிறார்கள். இது தொடர்கதையாகவே நடந்து வந்தது. ஒருநாள் எல்லோரும் அடித்து முடித்தபின் அப்போதும் புத்தர் அந்த இடத்தைவிட்டு நகராமல் நிற்க, ’உன்னைத்தான் அடித்து முடித்துவிட்டோமே, இன்னும் ஏன் குனிந்துகொண்டு நிற்கிறீர்கள்” என்றனர். அப்போது புத்தர், “இன்னும் ஒரு அடி என்மேல் விழவேண்டியுள்ளது. அதனால்தான் நிற்கிறேன். உங்கலில் ஒருவர் இன்னும் என்னை அடிக்கவில்லை. அவரும் அடித்துவிட்டால் நானிங்கிருந்து போதனைக்காக மனநிம்மதியோடு, என்போதனையை செய்வேன். இன்னையென்றால், இன்று ஒருவருக்கு அவர் விரும்பியபடி என்னால் இருக்கமுடியவில்லையே, என்கிற வேதனை வந்துவிடும். அதனால், அந்த ஒருவரையும் வந்து அடித்துவிட்டுச் செல்ல சொல்லுங்கள்” என்று, அக்கிராம மக்களை வணங்கிக் கேட்டார். பின் “நான் இங்கேயே இருக்கிறேன். அவரை வந்து அடிக்கச் சொல்லூங்கள். எவ்வளவு நேரமானாலும் காத்திருக்கிறேன்”என்றார். அதே போல் காத்திருக்கிறார். பகல் மறைந்தது. இரவும் வந்தது. அப்போதும் அவர் வரவில்லை. இரவும் கழிந்தது. விடிந்ததும் விட்டது.

மீண்டும் எல்லா மக்களும் கூடினர். புத்தர் அங்கேயே இருப்பதைக் கண்டு வியந்து கேட்டனர். “அந்த ஒருவர் இன்னும் வரவில்லை. அவர்க்காகத்தான் காத்திருக்கிறேன்” என்றார். ஊர்மக்கள் அவரை ஒருவித பயம் கலந்த மரியாதையுடன் பார்த்துவிட்டு, அவரை அன்றைய பொழுது அடிக்காமல் ஊருக்குள் திரும்பிவிட்டனர், புத்தரும் அவர்களுடனே ஊருக்குள் வந்தார். ஊர்தலைவனைப் பார்த்து, “என்னை தினமும் அடிக்கவேண்டியவர்கள் அடிக்காமல்,ஊருக்குள் வந்துவிட்டார்கள். நீங்கள் உத்தரவு தந்து அவர்களை அடிக்கச் சொல்லுங்கள் “ என்றார். யாரும் எந்த பதிலும் சொல்லவில்லை. புத்தரோ அவர்களை தன்னை அடிக்க, வலிய கெஞ்சிக்கொண்டு இருந்தார். இவ்வளவு தூரம் தாழ்மையுடன் இருக்கும் புத்தரையா? நாம் துன்புறுத்துவத்தினோம். ஊர்மக்கள் தங்களின் செயலுக்காக மிகவும் வருந்தி, புத்தரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, சீடர்களாக மாறி, ஞானம் பெற்றனர்.

அடியோனுக்கு, அடியோனாய் மாறுவதே ஞானம். வாழ்க தமிழ்.

இதை அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது இது ஒரு பொது அமைப்பு ஆகும் .ஜோதிடக்களஞ்சியத்திலிருந்து