ஞானம்

ஒரு மருத்துவர், வக்கீல்,ஆடிடர்,எஞ்சினியர் ,போன்றவர்கள் அனைவரும் , மிகவும் சிரமப்பட்டு ,கல்லூரிகளிலே சீட் வாங்கி , முறையாக பயின்று ,பிறகு அதன் விளக்கங்களை நன்கு புரிந்துகொண்டு சான்றிதழ்களுடன் வருகிறார்கள்.இது உங்களுக்கு புரிகிறதா.

என்னைப்போல் ,மேல்கொண்டு இருக்கிற படிப்பிலே எதையும் படிக்காமல் , இந்தமாதிரி படித்தவர்களிடம், இதெல்லாம் பொய் என்று சொன்னால்,எப்படி இருக்கும் அன்பர்களே., யோசனை செய்யுங்கள்.

முதலில் நம்பவேண்டும்.பிறகு புரியவேண்டும்.திருந்தும் புத்தி வேண்டும்.தன்னம்பிக்கை வேண்டும். ஒன்றுமே இல்லாமல் சும்மா கேள்விகேட்ட்டல், அதனால் எந்த பலனும் இல்லை. இது புரிகிறதா.

புரிகிறது என்றால், ஏன் ,இப்போது நான் சொல்லும் விஷயம் மட்டும் புரிவதில்லை./

இதை படியுங்கள்.

நீங்கள் எல்லோரும் எப்படி சிறுவயதில் இருந்தே,உங்கள் வாழ்க்கையில் எதுவாக ஆகவேண்டும் என்று நினைத்து வளர்ந்து வந்து படித்தீர்களோ, அதுபோல்தான், வேதம், புராணம், இதிகாசம், உபநிஷத்துக்கள், இவைகளை படித்து வந்து, அதில் நாங்கள் சொன்ன விஷயங்களை தெரிவிக்கிறோம்.

நீங்கள் படிக்காததினால் அது பொய் என்றோ, அல்லது உங்களுக்கு புரியவில்லை என்பதினால் அது தவறு என்றோ எப்படி சொல்லமுடியும் அன்பர்களே. அனைத்து படிப்பையும் படித்தவர்கள், முதலில் அடுத்தவன் படிப்பை பற்றி எப்படி உணரமுடியும்.

எனக்கு ஏன் மருத்துவம் புரியவில்லை.ஆண்டவன் என்னை மருத்துவராக படைக்கவில்லை. ஆனால், எனக்கு உடல் நலம் சரியில்லை என்றால், மருத்துவரை அணுகி, சரிசெய்துகொள்கிறேன். அவ்வளவுதான். புரியாததால் அதை தவறு என சொல்ல எனக்கு எந்த தகுதியும் இல்லை. அதுபோல்தான், சாஸ்திரங்கள் உங்களுக்கு புரியவில்லை என்பதால் அதை கேலி செய்வதோ, நையாண்டி செய்வதோ,அதற்க்கு தகுதி கிடையாது என்பதனை மட்டும் ஏன் சில பேர் புரிந்துகொள்வதில்லை. இதுதான் ஆச்சர்யம் அன்பர்களே. எல்லாமே விதி வழி மதி செல்லும் அல்லவா. ஆகவேதான்,

வியாதியா-மருத்துவரை சந்தி. உனக்கு எந்த பிரச்சனையா, அந்த பிரச்சனைக்கு உள்ள படித்தவரை சந்திப்போம் அல்லவா. அதுபோல்தான்., மன அமைதி இல்லையா, எங்களை சந்தியுங்கள். அவ்வளவுதான். சும்மா குறை சொல்லிக்கொண்டே , மாற்று கருத்து பதியாதீர்கள். சந்தேகம் இருந்தால் தெளிவு பெறுங்கள்.