டென்ஷனில் இருந்து விடுபட

என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிய நிலையில் இருந்தால், நல்ல தெளிவு கிடைக்க இதுபோல் செய்யவும்.

நவ தானியம் ஒன்பதையும் தனி தனியாக நூறு கிராம் வாங்கி மொத்தமாக கலந்து, ஒரு வாளியில் ஊறவைக்கவும். சாமான்களுக்கு மேல் தண்ணீர் நிற்கும்படி நிறைய ஊற்றவும்.

முதல் நாள் இரவே ரெடி செய்து, மறு நாள் காலை நீங்கள் குளித்துவிட்டு , சூரிய உதயத்துக்குள் , இதை அப்படியே பசு மாட்டுக்கு கொடுக்கவும்.

அது தானியத்தை நீருடன் சேர்த்து உறிஞ்சி சாப்பிடும்போது, உங்கள் மண்டையில் உள்ள கவலைகள் இறங்கிவிடும். எதுபோல் என்றால், வலிக்கு மாத்திரை சாப்பிட்டவுடன் எப்படி வலி குறைவதை நாம் உணருகிறோமோ அதுபோல் , கவலைகள் குறையும்.

மொத்தம் ஒன்பதுநாள் செய்யவும்.

Leave a comment