தனிஷ்டா பஞ்சமி. அடைப்பு .

இதற்கு அர்த்தம் என்ன என்றால், சில நட்சத்திரத்தில் இறந்தால் அந்த வீடு சில காலம் பூட்டி இருக்கவேண்டும். அந்த இடத்தில் சூடம் காண்பிக்கவேண்டும். வெண்கல கிண்ணத்தில் நல்லண்ணை சேர்த்து தானம் கொடுக்க வேண்டும்.

அவிட்டம்,சதயம்,பூரட்டாதி,உத்திரட்டாதி,ரேவதி -ஆறு மாதம் அடைப்பு

ரோகினி – நான்கு மாதம் அடைப்பு

கார்த்திகை உத்திரம் – மூன்று மாதம் அடைப்பு

மிருகசீரஷம்,புனர்பூசம்,சித்திரை,விசாகம்,உத்திராடம் – இரண்டு மாதம்

மீதி நட்சத்திரத்தில் இறந்தால் எதுவும் இல்லை.

அதாவது இதுபோல் இறந்தால், போகின்ற வழியில் அடைப்பு இருக்கும்.அதாவது, ட்ராபிக் ஜாம் என்பார்கள் இல்லையா அதுபோல் லேட் ஆகும் .இத்தனை நாள் போக்குவரத்து நெரிசலில் இருந்தால் அந்த ஜீவன் சிரமப்படும் இல்லையா. அதற்குதான் இந்த தானம். அதாவது ,ஜாம் ஆனா இடத்தில் இருந்து நாம் ஹெலிகாப்டேரில் சென்றுவிட்டால் எப்படியோ அப்படி இறைவன் செய்துவிடுவான்.

Leave a comment