தர்ப்பணம்

தர்ப்பணம் என்பது சரியாக காலை பதினொரு மணிக்கு மேல் ஒரு மணிக்குள் செய்யவேண்டும்.

இது லீவு நாளில் சாத்தியம். சாதாரணமாக வேலை இருக்கும் நாட்களில், நீங்கள் காலை எட்டு மணிக்கு மேல் செய்யவும்.

குதப காலம் என்று பெயர். இந்த நேரத்தில்தான் செய்யவேண்டும். அதாவது, முஹூர்த்த நேரம் என்று சொல்லி நாம் நல்ல காரியம் செய்கிறோம் அல்லவா. அதுபோல்தான் தர்ப்பணம் செய்ய குதப காலம் என்று பெயர்.

தர்ப்பணம் செய்யும்போது வயிறு காலியாக இருக்கவேண்டும். நன்றாக சாப்பிட்டுவிட்டு தர்ப்பணம் செய்தல் ஆகாது. பிரயோசனமில்லை.

அதைபோல் தர்ப்பணம் என்கிற போது, எள்ளுடன் கலந்த தண்ணீரை நிறைய விடவேண்டும். பாத்திரத்தை அப்படியே அதாவது பஞ்ச பாத்திரத்தை அப்படியே உத்தரநியுடன் கூடிய பஞ்சபாத்திரத்தில் உள்ள நீரை கை வழியாக நிறைய விடவேண்டும். அவசரம் கூடாது.நிதானமாக செய்யவேண்டும்.

அதாவது இந்த பூமி பிரிதிவி எனப்படும். அப்படி என்றால் மண் என்று அர்த்தம். ஆகையால்தான் நாம் டிபன் , சாப்பாடு என்று சாப்பிடுகிறோம். நடுவில் தண்ணீர் கொஞ்சம் குடிக்கிறோம். தண்ணீரையே குடித்தால் வயிறு பசி போகாது இல்லையா அன்பர்களே.

அதுபோல் இவர்கள் இருப்பது சந்திர லோகம் பக்கத்தில். இவர்களுக்கு நீர் தான் ஆதாரம். அதாவது நாம் இங்கு சாப்பிடுவதுபோல் அவர்களுக்கு தண்ணீர் அதிகம். நமக்கு சாப்பாடு அதிகம். அவர்களுக்கு தண்ணீர் அதிகம். அவர்களால் முழுதாக சாப்பிடமுடியாது.

அகவே, நீங்கள் நாளையில் இருந்து தண்ணீர் நிறைய விடவேண்டும்.

குறைவாக விட்டால், சபிப்பார்கள். ஆகாரம் போதவில்லை என்பதால்

Leave a comment