தர்மமே ஜெயிக்கும்.

தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும். ஆனால் தர்மமே மறுபடியும் ஜெயிக்கும். இதுதான் உண்மை. இந்த வரிகளை மறவாதீர்கள். நான் யோக்யனாகத்தான் இருக்கிறேன் .ஆனால் எனக்கு எதுவும் நடக்கவில்லை என்று சொல்லாதீர்கள். உங்களுக்கு எது தேவை எது தேவை இல்லை என்பது உங்களை படைத்த கடவுளுக்கு நன்கு தெரியும். நீங்களே நினைத்து பாருங்கள். சில விஷயங்கள் நமக்கு நடந்துவிடும். அன்று பூராவும் ஒரே கொண்டாட்டம்தான். ஆனால், சில நாட்கள் கழித்து, ஏண்டா இந்த காரியம் அன்று நடந்தது.நடக்காமலேயே இருந்திருக்கலாம் என்று நினைத்திருப்பீர்கள் அல்லவா. அன்று இருந்த சந்தோசம் இன்று ஏன் இல்லை. அதுதான் நம் புத்தி. ஆகவே, எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள். கடவுள் நமக்கு நல்லதே செய்வார் என்று நம்புங்கள்.