திருமணங்கள் பகுதி-2

கன்னிகாதானம் என்பது, மிகவும் ஒசத்தியாகும். ஒருவருக்கு பெண் குழந்தை அவசியம் வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. இவர்களே பாக்கியவான்கள் ஆவார்கள்.

ஏனேன்றால், பெண் இல்லாமல் உலகம் கிடையாது, வீடு, நாடு கிடையாது. எல்லோருமே ஆணாக இருந்தால், என்ன ஆகும் இந்த பிரபஞ்சம்.

அதேபோல் எல்லோருமே பெண் குழந்தை வேண்டும் என்றால் ஆண் இல்லாமல் என்ன ஆகும். ஆகவேதான் ஒரு குடும்பத்தில், ஒவ்வொருவரும், கண்டிப்பாக ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இருக்கவேண்டும் என்கிற என்னத்தை நமக்கு பெரியோர்கள் சொல்லிவந்தார்கள்.

இந்த உலகத்தில் அத்தனையும் கெட்டுப்போவதற்கு நாமேதான் காரணம். பெண்களை திருமணம் செய்து கொடுக்க வரதட்சினை என்கிற கொடிய விஷத்தினால், வெறுக்கும்படி நேர்ந்த்துவிட்டது. இப்படியே போனால் உலகில் பெண் இனமே இல்லாமல் போய்விடும்.ஆகையால், பெண் குழந்தை பெற்றவர்கள் பாக்கியவான்கள் ஆவார்கள். என வேதம் கூறுகிறது அன்பர்களே.

ஆகவே, பெண்களே நீங்களும் சுதந்திரம் இல்லை என்று நீங்களாகவே கற்பனை செய்துகொள்ளாதீர்கள்.

உங்களுக்குத்தான் முழு உரிமையும் கொடுக்கப்பட்டுள்ளது .ஆனால் நீங்கள் அதை தவறாக பயன்படுத்திகிரீர்கள். இங்குதான் உங்களுக்கு சிரமம் வந்துவிடுகிறது. ஆகவே, ஒழுக்கம், நேர்மை, புலனடக்கம், இவைகள் மிகவும் முக்கியம் என்று அதனால்தான் பெரியோர்கள் வைத்தார்கள்.

ஆகவே நீங்கள் இனி வரும் காலங்களில் உங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவீர்களே யானால், உங்களுக்குத்தான் வெற்றி கிடைக்கும் அன்பர்களே,. இனி தொடர்ந்து திருமண அர்த்தத்தை பாப்போம்.சரியா.

Leave a comment