திருமணங்கள் பகுதி-3

அந்த காலத்திலேயே, அதாவது வேத காலத்தை என்று அர்த்தம் கூடாது, நமது காலத்திலேயே, சுமார் இருபது ஆண்டுகள் முன்பு வரை, நல்ல பெண் மருமகளாக வரவேண்டும் என்கிற படியால், பிள்ளை வீட்டார்கள் தேடி பொய் பெண்ணை கேட்டு திருமணம் செய்தார்கள். இது தான் தெய்வீக திருமணங்கள் ஆகும்.

பெண் வீட்டார் வந்து கேட்கவேண்டும் என்று, பணம் படைத்தவர்கள், சில பேர் செய்ய அதையே வழக்கமாக கொண்டுவந்துவிட்டார்கள். அதனால்தான் இப்பொது சிரமம் அதிகம் இருக்கிறது. ஆகவே, நானெல்லாம், எனது மகனுக்கு நானே நேரில் போய்தான் பெண்ணை கேட்டு திருமணம் செய்து வைத்தேன் அன்பர்களே. அதுபோல் நீங்களும் செய்யுங்கள். எல்லாம் நலமாகவே இருக்கும்.

Leave a comment